தந்தையை இழந்த நடிகர் அஜித்.. நேரில் சென்று ஆறுதல் சொன்ன தளபதி விஜய்

நடிகர் அஜித் குமாரின் வீட்டில் இன்று எதிர்பாராத விதமாக ஒரு சோக நிகழ்வு நடந்துள்ளது. அவருடைய தந்தை சுப்பிரமணி இன்று அதிகாலை மரணமடைந்து இருக்கிறார். குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா சென்றிருந்த நடிகர் அஜித்குமாருக்கு இது ஒரு பேரிடியாக அமைந்திருக்கிறது. அவர் செய்தி கேட்டதும் உடனடியாக சென்னை திரும்பி இருக்கிறார். அஜித்தின் தந்தையின் இறுதி மரியாதை பெசன்ட் நகரில் நடந்து முடிந்திருக்கிறது.

அஜித்தின் தந்தை காலமான செய்தி இன்று காலை வெளியானதில் இருந்தே அவருக்கு ரசிகர்களும், பொதுமக்களும், சினிமா கலைஞர்களும் ஆறுதல் சொல்லி வருகின்றனர். மேலும் அஜித் தரப்பிலிருந்து தன் தந்தையின் இறுதி மரியாதை என்பது குடும்ப நிகழ்வாக இருக்க வேண்டும், அதனால் ரசிகர்கள் யாரும் நேரில் வர வேண்டாம் என்று அறிவித்திருந்தார்.

Also Read:வீட்டிலிருந்து வந்த மரணச் செய்தி.. வெளிநாட்டிலிருந்து விரைந்த அஜித்

இதற்கிடையில் தளபதி விஜய், நடிகர் அஜித்குமாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார். லியோ பட சூட்டிங்கில் இருந்து நேற்று இரவே அவர் சென்னை திரும்பி இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் அஜித்குமாரின் தந்தை இறந்த செய்தி கேட்டு நேரில் சென்று ஆக வேண்டும் என்று திட்டமிட்ட விஜய் அவருடைய மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் பேசி அதற்கான ஏற்பாடு செய்திருக்கிறார்.

அஜித் குமாரின் தந்தை இறுதி மரியாதையில் கலந்துகொள்ள திருவான்மியூர் வரை சென்று இருக்கிறார் நடிகர் விஜய். அதே நேரத்தில் இறுதி அஞ்சலி முடிந்து அஜித் வெளியேறி விட்டாராம். அதை தெரிந்து கொண்ட விஜய், அஜித்தின் காரை பின் தொடர்ந்து அவருடைய வீட்டுக்கே சென்றிருக்கிறார். அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்.

Also Read:அஜித்தின் வெற்றி கூட்டணியை இணையவிடாமல் செய்த சதி.. இயக்குனருக்கு கட்டளை போட்ட விஜய்யின் மாமா.!

நடிகர் விஜய் மற்றும் அஜித் குமாரின் சந்திப்பானது 15 நிமிடங்கள் வரை சென்றிருக்கிறது. இந்த சந்திப்பின்போது மக்கள் இயக்க நிர்வாகிகளில் சிலர் விஜய்யுடன் சென்றதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது தனிப்பட்ட நிகழ்வு என்பதால் எந்த புகைப்படங்களும் வெளியே வரவில்லை. விஜய் நேரில் சென்று சந்தித்ததை அவருடைய மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து இருக்கிறார்.

வெள்ளி திரையில் இவர்கள் இருவருக்கும் ஆயிரம் போட்டிகள் இருந்தாலும் திரைக்குப் பின்னால் எப்பொழுதுமே இவர்கள் நட்புடன் பழகுவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்த நிலையில் அஜித்தின் துக்கத்தில் கலந்து கொள்ள விஜய் நேரில் சென்று இருப்பது இருவருடைய ரசிகர்களுக்குமே மிகப் பெரிய நிகழ்வாக இருக்கிறது.

Also Read:அஜித், விஜய் உச்சத்தில் இருக்க இதுதான் காரணம்.. அவர்களை வியந்து பார்த்த கோவை சரளா

Sharing Is Caring:

அதிகம் படித்தவை