அட்லி – ஷாருக்கான் படம் இந்த வெப் சீரியலின் அட்ட காப்பியா.? மீண்டும் சர்ச்சையான வைரல் போஸ்டர்.!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லி ராஜா ராணி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இவரது முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. எந்த அளவிற்கு படம் வெற்றி பெற்றதோ அதே அளவிற்கு பல விமர்சனங்களையும் சந்தித்தது. முதல் படம் மட்டுமல்லாமல் இவரது இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே விமர்சனங்களை சந்தித்தன.

இது தவிர பல்வேறு படங்களில் இருந்து காப்பி அடித்து தான் அட்லி படங்களை இயக்கி வருகிறார் என்பது போன்ற சர்ச்சைகளும் எழுந்தது. ஆனால் யார் என்ன கூறினாலும் அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என்பது போலவே அட்லி தனது அடுத்தடுத்த படங்களை இயக்கி வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஹிந்திப் படம் ஒன்றை இயக்கவுள்ளார். அதுவும் சாதாரணமாக அல்ல பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கான வைத்து அட்லி அவரது புதிய படத்தை இயக்க உள்ளார்.

இப்படத்தில் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், நடிகை பிரியாமணியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இவர்களைத் தவிர முன்னணி காமெடி நடிகரான யோகி பாபுவும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் தொடங்கவில்லை. ஆனால் அதற்குள் இப்படம் உலக அளவில் மிகவும் பிரபலமான மணி ஹெய்ஸ்ட் (Money Heist) வெப் தொடரின் காப்பி என ஒரு சிலர் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இருப்பினும் இதுபோன்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

money-heist-atlee
money-heist-atlee
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்