தளபதியுடன் 5 படங்களில் நடித்து 3 ஹிட் கொடுத்த ஒரே நடிகை.. முரட்டு கவர்ச்சியில் இவங்கள அடிச்சிக்க ஆளில்லை.!

தமிழ் சினிமாவில் ஒரு சில ஜோடி எப்போதுமே ரசிகர்களுக்கு ஃபேவரிட் ஆக இருக்கும். அந்த வகையில் கமல் ஸ்ரீதேவி, ரஜினி ஸ்ரீப்ரியா, அதற்கு அடுத்தபடியாக விஜய் சிம்ரன் தான். இவர்கள் ஜோடியாக நடித்த எல்லா படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

ஒன்ஸ்மோர்: 1997 ஆம் ஆண்டு விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய திரைப்படம் ஒன்ஸ்மோர். விஜயும் சிம்ரனும் முதல் முறையாக ஜோடி சேர்ந்த படம் இதுதான். இத்திரைப்படத்தில் சிவாஜிகணேசன், சரோஜாதேவி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களுமே ஹிட்டானது.

நேருக்கு நேர்: 1997 ஆண்டு வசந்த் இயக்கி, மணிரத்னம் தயாரித்த வெளிவந்த திரைப்படம் நேருக்கு நேர். இப்படத்தில் சூர்யா, விஜய், சிம்ரன், கௌசல்யா, ரகுவரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கௌசல்யா நடித்திருப்பார். இப்படத்தின் இயக்குனர் வசந்த், இசையமைப்பாளர் தேவா.

துள்ளாத மனமும் துள்ளும்: 1999இல் வெளியான இப்படத்தில் விஜய் ,சிம்ரன், மணிவண்ணன், தாமு, வையாபுரி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் இயக்குனர் எழில் இசை எஸ் ஏ ராஜ்குமார். இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் வரவேற்பு பெற்றது. கேரளாவில் விஜய்க்கு இப்படம் பெரிய அளவில் வரவேற்பை வாங்கித்தந்தது.

Vijay

பிரியமானவளே: 2000 ம் ஆண்டில் வெளிவந்த பிரியமானவளே திரைப்படத்தை கே செல்வபாரதி இயக்கியிருந்தார் . இப்படத்தில் விஜய்க்கு அப்பாவாக எஸ் பி பாலசுப்ரமணியம் நடித்திருந்தார். இப்படம் அக்ரிமென்ட் திருமணம் என்ற கதைக் களம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

உதயா: 2004 ஆம் ஆண்டு வெளிவந்த உதயா திரைப்படம் அழகம்பெருமாள் இயக்கத்தில் வெளிவந்தது. விஜய், நாசர், சிம்ரன் ஆகியோர் நடித்திருந்தார்கள். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். எதிர்பார்த்த அளவிற்கு இப்படம் வெற்றி பெறவில்லை. உதயா திரைப்படமே விஜய்யும் சிம்ரனும் ஜோடியாக சேர்ந்து நடித்த கடைசி திரைப்படம்.

simran-cinemapettai
simran-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்