மற்ற ஹீரோக்களுக்கு தளபதி பாடிய 3 பாடல்கள்.. சூர்யாவுக்கு கொடுத்த சூப்பர் ஹிட்

நடிகர் விஜய் நடிப்பதை காட்டிலும் பாடல்களை பாடுவதில் கைதேர்ந்தவர். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் ரஞ்சிதமே பாடலை விஜயின் குரலில் கேட்க அட்டகாசமாக இருந்தது. இப்படி அவர் நடிக்கும் பல படங்களில் நடிகர் விஜய் தொடர்ந்து பல பாடல்களை பாடி வருவதுண்டு. ஆனால் 90 காலக்கட்டத்தில் மற்ற நடிகர்களுக்காக விஜய் பாடிய, 3 நடிகர்களின் பட பாடலை பற்றி தற்போது பார்க்கலாம்.

Also Read: வாரிசில் தெறிக்கவிட்ட ஒரே ஒரு அரசியல் வசனம்.. அஸ்திவாரத்தை ஆழமாக போட்ட விஜய்

துள்ளி துளிர்ந்த காலம்: நடிகர் அருண் விஜய் 1995 ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான முறை மாப்பிள்ளை படத்தின் மூலமாக அறிமுகமானார்.அப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலசேகரன் இயக்கத்தில் உருவான துள்ளி துளிர்ந்த காலம் படத்தில் அருண் விஜய் நடித்திருப்பார். இசையமைப்பாளர் ஜெயந்த் இசையமைத்த இப்படத்தில் விஜய் ஒரு பாடலை பாடினார். டக் டக் என்ற பாடலை பாடகர் உன்னிகிருஷ்ணன் சுஜாதா உள்ளிட்டோருடன் விஜய் பாடிய பாடல் சூப்பர் ஹிட்டானது.

வேலை : இயக்குனர் சுரேஷ் இயக்கத்தில் நடிகர்கள் விக்னேஷ், நாசர், இந்திரஜா உள்ளிட்டோரின் நடிப்பில் 1998 ஆம் ஆண்டு வேலை படம் வெளியானது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வெளியான இப்படத்தில் காலத்துக்கேத்த கானா என்ற பாடலை விஜய், பிரேம்ஜி அமரன், நாசர் உள்ளிட்டோர் குரலில் வெளியானது பாடல் வெளியாகி சக்கைபோட்ட நிலையில் நடிகர் நாசர் முதன்முதலாக பாடகராக அறிமுகமான பாடலாகும்.

Also Read: விஜய்யின் பிசினஸையே நொறுக்கிய உதயநிதி.. அதங்கத்தை வெளிப்படுத்திய முரட்டு பிரபலம்

பெரியண்ணா: 1999 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ்.எ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சூர்யா, மீனா, மானசா, விஜயகாந்த் உள்ளிட்டோர் நடித்திருப்பர். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், இசையமைப்பாளர் பரணியின் இசை பட்டையை கிளப்பிய நிலையில் விஜய் இப்படத்தில் 2 பாடல்களை பாடி அசத்தினார்.இதில் நா தம் அடிக்கிற ஸ்டைல பாத்து என்ற பாடல் விஜயின் குரலில் அட்டகாசமாக வெளியாகி ஹிட்டானது.

Also Read: வாரிசு படத்தில் ஒரு டயலாக் கூட இல்லாமல் அசிங்கப்பட்ட பிக் பாஸ் நடிகை.. குஷ்புக்கு இவங்க எவ்வளவோ பரவாயில்ல

Stay Connected

1,170,265FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -