மலையாள சினிமாவை திருப்பி போட்ட தளபதி பட தேவா.. பத்து வருடத்தில் உடைக்கப்பட்ட மோசமான பிம்பம்

Actor Mammooty : மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு இப்போது 72 வயதாகிறது. தற்போது வரை சினிமாவில் தனது பங்களிப்பை சிறப்பாக கொடுத்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் மம்மூட்டி மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான காதல் தி கோர் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது.

பொதுவாக மலையாள சினிமா என்றாலே ஒரு தவறான பிம்பம் தான் அந்த காலத்தில் இருந்தது. அதாவது கவர்ச்சியான படங்கள் மட்டும் தான் மலையாள சினிமாவில் எடுக்கப்படும் என்று ஒரு முத்திரை குத்தப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் அப்போது மலையாள சினிமாவின் படப்பிடிப்புகளும் தமிழ்நாட்டில் தான் நடைபெறும்.

அதிலும் குறிப்பாக ஏவிஎம் ஸ்டுடியோவில் தான் பெரும்பான்மையான படங்கள் எடுக்கப்பட்டு வந்தது. அப்போது தமிழ் படத்தில் உள்ள பிரபலங்களுக்கு மட்டும் உடை மாற்ற அரை கொடுப்பார்களாம். மலையாள சினிமாவில் உள்ள நடிகைகள் மரத்துக்கு பின்னால் தான் துணியை மாற்றம் நிலை இருந்துள்ளது.

Also Read : PM பேத்தி, CM மகளை ஹீரோயின் ஆக்கி அழகு பார்த்த மணிரத்தினம்.. கை கொடுத்த தூக்கி நிறுத்திய படம்

80 மற்றும் 90களில் மம்முட்டி மலையாள சினிமாவில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஆட்டி படைக்க ஆரம்பித்தார். அவரால் இந்த சினிமாவுக்கு மிகப் பெரிய பெயர் கிடைத்தது. வெறும் அடல்ட் படமாக எடுக்கப்படும் மலையாள சினிமா என்ற பெயரை மாற்றியது மம்மூட்டி தான். தொடர்ந்து ஆக்ஷன் படங்கள் கொடுத்து மலையாள சினிமாவை தூக்கி நிறுத்தினார்.

அதேபோல் மம்மூட்டி தமிழ் சினிமாவையும் விட்டு வைக்கவில்லை. மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான தளபதி படம் இன்றும் தமிழ் சினிமாவில் பேசப்படும் படமாக இருக்கிறது. இதில் அவரது தேவா கதாபாத்திரம் இன்றளவும் மைல்கல்லாக இருக்கிறது. இவ்வாறு மம்முட்டி தனது பங்களிப்பை சிறப்பாக தொடர்ந்து செய்து வருகிறார்.

Also Read : பான் இந்தியா படத்துக்காக மணிரத்தினம் செய்யத் துணிந்த விஷயம்.. சேர்ந்தே ஒத்து ஊதிய கமல்