காதலிக்கும் போதே உடலுறவு செய்யலாம்.. தளபதி பட நடிகையின் சர்ச்சையான பேச்சு

சினிமாவில் கதாநாயகிகள் அளிக்கும் பதில் சில சமயங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த வகையில் தற்போது தளபதி பட நாயகி காதலிக்கும் போது உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்பது போன்ற சர்ச்சையான பேச்சை கிளப்பியுள்ளார். இந்த பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகைகள் பொறுத்தவரை ரசிகர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே பட வாய்ப்பு மீண்டும் கிடைக்கும். அதே போல் நண்பன் பட நாயகி இலியானாவிற்கு பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பு இல்லாததால் அதன் பிறகு பெரிய அளவில் படங்கள் நடிக்காமல் சினிமாவை விட்டு விலகினார்.

இலியானா சமூகவலைத்தள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார், தொடர்ந்து இவர் வெளியிட்டுவரும் புகைப்படங்கள் ரசிகர்களை பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. அதனாலேயே இலியானாவுக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இலியானா ஏற்கனவே ஒரு நபரை காதலித்து வந்தார். ஆனால் அதன்பிறகு ஒரு சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். இலியானா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது இலியானாவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.

அப்போது தொகுப்பாளர் ஒருவர் இலியானா நீங்கள் ஏற்கனவே உடலுறவிற்கு காதலுக்கும் தொடர்பு இல்லை என கூறினீர்கள். அதற்கு என்ன அர்த்தம் என கேள்வி கேட்டார். அதற்கு இலியானா உடலுறவு என்பது ஒருத்தருடன் விருப்பப்பட்டு அதனை செய்ய வேண்டும் எனக் கூறினார்.

மேலும் உடலுறவு சில உணர்ச்சிகளுடன் இருக்கவேண்டும் இதனை நீங்கள் ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு வெளியே இருந்து பார்க்கும் போது தவறாகத்தான் தெரியும் ஆனால் காதலில் இருக்கும் போது அவருடன் உடலுறவு வைத்துக்கொள்ளலாம்.

மேலும் இருவரது உடலும் இணைவது பற்றி நினைப்பது தவறு இரண்டு மனங்களின் நினைவு என்ற உணர்வு அவர்களிடம் இருக்க வேண்டும் அப்போதுதான் இருவரும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என வெளிப்படையாகக் கூறினார். தற்போது இதற்கு ஒரு சில ரசிகர்கள் இலியானா இவ்வளவு வெளிப்படையாக பேசக் கூடாது எனக் கூறி வருகின்றனர்.