அஜித்தின் ஆஸ்தான இயக்குனருடன் இணையும் தளபதி.. கனவு படத்திற்காக விஜய்க்கு போட்ட கொக்கி

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக, தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் தாறுமாறான வசூலை வாரி குவித்து கொண்டிருக்கும் விஜய்யின் படத்தை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தளபதியிடம் கொக்கி போட்டு இருக்கிறார்.

அதிலும் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் போன்ற நான்கு படங்களையும் வரிசையாக இயக்கிய அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சிறுத்தை சிவாவை வைத்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் டிஜி தியாகராஜன் அவர்கள் தன்னுடைய நீண்ட நாள் கனவை நிறைவேற்றிக் கொள்ள துடிதுடித்துக் காத்திருக்கிறார்.

Also Read: லாரன்ஸ் பிள்ளைகளுக்கு விஜய் செய்யும் உதவி.. விரைவில் இணைய உள்ள கூட்டணி

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் டிஜி தியாகராஜன் அவர்கள் ஒரு பேட்டியில் தனது ஆசையை பற்றி கூறியிருக்கிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் கிராமத்து பின்னணியில் விஜய் நடிக்க நான் தயாரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இதை நான் விஜய்யிடம் பேசி விட்டேன். அதற்கான நேரம் கண்டிப்பாக அமையும். விஜய் ஓகே சொன்னதும் கண்டிப்பாக சிறுத்தை சிவா தான் இதை இயக்க வேண்டும் என உறுதியுடன் இருக்கிறேன். இது எனது ரொம்ப நாள் ஆசை என்று தயாரிப்பாளரே கூறியது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இது கண்டிப்பாக நடக்கும்.

Also Read: மீண்டும் அக்கட தேசத்து இயக்குனருடன் கூட்டணி போடும் விஜய்.. தம்பி இயக்குனர் மட்டும் வேண்டவே வேண்டாம்

ஆனால் விஜய் ஒவ்வொரு படங்களுக்கும் பல இயக்குனர்கள் காத்திருக்கும் வேளையில், இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை. ஒருவேளை சத்யஜோதி அவர்களுக்காகவே விஜய் நடிக்க வாய்ப்பு இருக்கிறது. தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக அட்லி, தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி என விஜய்யின் அடுத்தடுத்த படங்களை இயக்குவதற்கு டாப் இயக்குனர்கள் வரிசை கட்டி காத்திருக்கும் நிலையில், சிறுத்தை சிவா படத்தில் இணைவாரா என்பதை குறித்து கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: விஜய்காக வரிசை கட்டி நிற்கும் 6 இயக்குனர்கள்.. அட்லீக்கு கொடுத்த அல்வா!

- Advertisement -