தளபதி-69 படத்துக்கு பெரிய முதலாளியே பிக்ஸ் பண்ணிய விஜய்.. வீசின கையும் வெறுங்கையுமாய் ஏமாந்து போன 2 தயாரிப்பாளர்கள்

Vijay in Thalapathy 69: பொதுவாக பெரிய நடிகர்களாக இருக்கும் முன்னணி ஹீரோக்கள் எந்த இயக்குனருடன் கூட்டணி வைக்கப் போகிறார் அதை யார் தயாரிக்கப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருப்பார்கள். ஏனென்றால் அதை கணித்தே அந்த படத்தின் வெற்றி எந்த அளவிற்கு இருக்கும் என்று நிர்ணயிக்க முடியும்.

இப்படி இருக்கும் பொழுது விஜய் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஆட்ட நாயகனாகவும் தொடர் வெற்றியை கொடுத்து வருகிறார். அப்படிப்பட்ட இவருடைய அடுத்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்க தான் செய்யும்.

அதிலும் தற்போது அரசியலில் கால் தடம் பதிக்க போவதால் கடைசி படத்தை யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்ற விவாதம் பல மாதங்களாகவே தொடர்ந்து வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தளபதி 69 படத்தை எச் வினோத் இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகிவிட்டது.

இதனை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் உருவாகப் போகும் படத்தை ஆர்ஆர்ஆர் தயாரிப்பாளர் தனய்யா தயாரிப்பதாக இருந்தது. ஆனால் அவருடைய அவசர புத்தியால் எல்லாமே கைநழுவி விட்டது. அதாவது எந்தவித அக்ரீமெண்டும் போடுவதற்கு முன் சேட்டிலைட், டிஜிட்டல் போன்ற உரிமைகளை இன்னொரு பக்கம் வியாபாரம் பண்ண ஆரம்பித்து விட்டார்.

அதிரடியாக முடிவெடுத்த விஜய்

இதை தெரிந்து கொண்டு கடுப்பான விஜய், தனய்யா-வை தூக்கிவிட்டார். அதனால் சன் பிக்சர்ஸ் மற்றும் ஆர்பி சவுத்ரி என இரண்டு பெரிய நிறுவனங்கள் தளபதி 69 படத்தை தயாரிப்பதற்கு போட்டி போட்டு வந்தார்கள். அதே மாதிரி விஜய்யும் இவர்களில் யாருக்காவது ஒருவருக்கு கால் சீட் கொடுப்பதாக இருந்தது.

ஆனால் கடைசியில் இவர்கள் இருவருக்கும் அல்வா கொடுக்கும் விதமாக இவர்களுக்கு பதிலாக லலித்துக்கு சான்சை கொடுத்து விட்டார். இவர்கள் கூட்டணியில் வந்த லியோ படம் வசூல் அளவில் லாபத்தை வாரிக்குவித்தது. அதனால் என்னமோ லலித்திடமே முழு பொறுப்பையும் ஒப்படைத்து விட்டார். இதனை தொடர்ந்து படப்பிடிப்பு ஜூன் மாதம் கடைசியில் துவங்க இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்