உக்காந்த எடத்துல இருந்தே கள்ளா கட்டியுள்ள தளபதி 67… வசூலை கேட்டு ஆடிப்போன அஜித் வட்டாரம்

நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 67 படத்தின் அப்டேட் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகளவில் ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் லிஸ்டுகள் வெளியாகி வைரலான நிலையில், கூடிய விரைவில் இப்படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. மும்பையை சேர்ந்த கேங்ஸ்டராக இப்படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வைரலானது.

மேலும் கில்லி, குருவி, ஆதி, திருப்பாச்சி உள்ளிட்ட படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை திரிஷா, தற்போது தளபதி 67 படத்தில் அவருக்கு மனைவியாக நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் உலா வந்தது. மேலும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்குப் பெற்ற ஜனனி தனது முதல் படத்திலேயே விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

Also Read: விஜய் நடுத்தெருவுக்கு வருவார், சாபமிட்ட மனைவி.. கேட்பார் பேச்சைக் கேட்டு தவறாக போகும் தளபதி.!

இதனிடையே விஜய் 50 வயதான நபர் தோற்றத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ள நிலையில், அதற்கான கெட்டப்புகளில் களமிறங்கி வருகிறாராம். இதுயெல்லாம் ஒரு பக்கம் இருக்க தளபதி 67 படத்தின் ப்ரீ ரிலீஸ் வசூல் 500 கோடி ஆகியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த வசூல் எகிறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் பூஜை தேதி கூட அறிவிக்கப்படாத நிலையில், தளபதி 67 படம் வரும் அக்டோபர் 19 அன்று ரிலீஸ் தேதி என விஜயின் வலது கையான புஸ்ஸி ஆனந்த் அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனிடையே தளபதி 67 படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ள நெட்பிலிக்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 150 கோடி வரை கொடுத்து வாங்கியுள்ளதாம்.

Also Read: ஷூட்டிங் துவங்குவதற்கு முன்பே பல கோடி லாபம் பார்த்த லோகேஷ்.. வாயை பிளக்க வைத்த தளபதி 67 ப்ரீ சேல் விவரம்

இவ்வளவு கோடி கொடுத்து எந்த ஒரு தமிழ் சினிமாவும் ஓடிடியில் விலை போனது இல்லை என்றும் விஜய் படத்தின் இந்த சாதனையை முறியடிக்க முடியாதது என்றும் விஜயின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இப்படத்தின் சாட்டிலைட் உரிமம், ஓவர்சீஸ் என தற்போதே இப்படத்தின் வசூலாக 750 கோடி வரை உட்கார்ந்த இடத்திலேயே கல்லா கட்டியுள்ளதாக கூறியுள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் விக்ரம், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களின் தொடர் ஹிட் காரணமாகவும், மீண்டும் விஜயுடன் இவர் இணைந்து படம் பண்ணும் காம்போவை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கும் வேளையில், படத்தின் பூஜைக்கு முன்பாகவே இப்படம் இவ்வளவு கோடி வசூலானது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Also Read: தளபதி 67 படத்தில் விக்ரம் இல்லையா!. பெரிய பிளான் போட்டிருக்கும் லோகேஷ்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்