கொஞ்சம் கூட கணிக்கவே முடியாத கதாபாத்திரங்கள்.. நடிப்புக்கு சவால் விடும் கூட்டணியில் தளபதி 67

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட் தோல்விக்குப் பிறகு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் கொடுக்க வேண்டும் என இப்படத்தில் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார் விஜய். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், மைக் மோகன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க உள்ளது. இதற்காக பிரமாண்டமான செட் போடும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் எப்போதும் விஜய் தனது படம் முடிந்த பிறகுதான் அடுத்த படத்திற்கான அப்டேட்டை கொடுப்பார்.

இந்நிலையில் தற்போது தளபதி 67 படத்தை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய்க்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் மீண்டும் விஜய் இணையுள்ளார். கடந்த ஆண்டு இவர்கள் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் வசூலில் வேட்டையாடியது.

தற்போது மீண்டும் இவர்கள் இணையுள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கும் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். மேலும் தளபதி 67 இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும்.

மேலும் இப்படத்திற்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படம் எடுத்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிகட்ட வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இதற்கு அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் விஜய் படத்திற்கான வேலைகளை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடும் வகையில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் ஒரு மாஸான படம் உருவாக உள்ளதால் இந்தச் செய்தி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்