தளபதி66 படத்தில் வில்லனாக போகும் மாஸ் ஹீரோ.. பட பூஜை தேதியுடன் வந்த அப்டேட்

இன்னைக்கு கோலிவுட்ல டிரெண்டிங்ல இருக்கற ஒரே ஒரு நபர் நம்ம தளபதி விஜய் மட்டும் தான். காரணம் இவரோட இத்தனை வருஷ திரைப்பயணத்துல முதல் முறையா நேரடி தெலுங்கு படத்தில நடிக்க போறாருங்க. அதைபத்தி தான் நம்ம கோலிவுட் வட்டாரம் முழுக்க பரபரப்பா பேசிட்டு இருக்காங்க.

நம்ம விஜய் இப்போ இயக்குனர் நெல்சன் இயக்கத்தில பீஸ்ட் படத்தில நடிச்சிட்டு இருக்காரு. இந்த படம் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாம். சீக்கிரமே படத்தோட இதர பணிகளை முடிச்சிட்டு அடுத்தாண்டு பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டம் போட்டுருக்காங்க. பீஸ்ட படத்தோட பரபரப்பே இன்னும் அடங்கல அதுக்குள்ள தளபதி 66 படத்தை பத்தி பேச ஆரம்பிச்சுட்டாங்க.

இதற்கேற்ற மாதிரி இதுவரை வெறும் வாய் வார்த்தையா மட்டுமே சொல்லிட்டு இருந்த தளபதி 66 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று படக்குழுவினர் வெளியிட்டாங்க. இதனால விஜய் ரசிகர்கள் பயங்கர குஷில இருக்காங்க. அதுமட்டுமில்லங்க முதல் முறையா விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் பைலிங்குவல் படமும் இதுதான். அதனால தானோ என்னவோ இந்த படம் மீதான எதிர்பார்ப்பு இப்போவே அதிகரிக்க தொடங்கிருச்சு.

நேத்துதான் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையே வெளியிட்டாங்க. ஆனால் அதுக்குள்ள படம் குறித்த ஒரு சூப்பரான அப்டேட் இணையத்தில் உலா வந்துகிட்டு இருக்கு. இது எந்த அளவுக்கு உண்மைனு தெரியல. ஆனால் விஜய் ரசிகர்கள் இதை டிரெண்ட் செய்து வராங்க. அது வேற ஒன்னும் இல்லைங்க தளபதி 66 படத்துல ஒரு பிரபல தெலுங்கு ஹீரோ தான் வில்லனா நடிக்கிறாராம்.

nani-thalapathy66
nani-thalapathy66

ஆமாங்க அவரு வேற யாருமில்ல நான் ஈ படம் மூலமா நம்ம எல்லோருக்கும் பரிச்சயமான நடிகர் நானி தான். தெலுங்கு சினிமால முன்னணி நடிகராக வலம் வந்துகிட்டிருக்குற நானி தான் தளபதி 66 படத்துல விஜய் கூட சண்டை போட போறது ஒரு தகவல் கசிந்து வருகிறது. இது எந்தளவிற்கு உண்மைனு தெரியல. அதுமட்டுமில்லைங்க வரும் அக்டோபர் 15 தேதி தளபதி 66 படத்தின் பூஜை நடைபெற உள்ளதாகவும் சொல்றாங்க.!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்