தளபதி 66 – அதிகாரப்பூர்வமாக வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்.. நியூ லுக்கில் தெறிக்கவிடும் விஜய்.!

தமிழ் சினிமாவில் நடிப்பு, நடனம் என அனைத்திலும் சிறந்து விளங்கும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் விஜய்க்கு ரசிகர்கள் ஏராளம். ஆனால் தெலுங்கில் அந்த அளவிற்கு ரசிகர்கள் கிடையாது. தற்போது அந்த குறையை போக்கும் விதமாக விஜய் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார்.

விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். விஜய்யின் 65வது படமாக உருவாகி வரும் பீஸ்ட் படம் கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் விஜய்யின் 66வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. முன்னதாக விஜய்யின் 66வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி வந்த நிலையில் தற்போது இதனை உறுதி செய்யும் விதமாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

தமிழில் கார்த்தி மற்றும் நாகர்ஜூனா நடிப்பில் வெளியான தோழா படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் வம்சி படிப்பள்ளி. தற்போது இவர் தான் தளபதி 66 படத்தை இயக்க உள்ளார். வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தின் பூஜையை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

thalapathy66-vamsi
thalapathy66-vamsi

இதுவரை தமிழ் மொழியில் மட்டுமே நடித்து வந்த நடிகர் விஜய் தற்போது முதன் முறையாக அக்கட தேச மொழியில் நடிக்கிறார். இதன் மூலம் தனது 29 ஆண்டு கால திரைப்பயணத்தில் முதன் முறையாக பிறமொழி படமொன்றில் ஹீரோவாக விஜய் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாக உள்ளதாம்.

beast-look-thalapathy-vijay
beast-look-thalapathy-vijay
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்