12 வருடங்கள் கழித்து மீண்டும் விஜய் பட வில்லனாகும் பிரபல நடிகர்.. தளபதி66 லேட்டஸ்ட் அப்டேட்

பீஸ்ட் திரைப்படத்திற்கு அடுத்ததாக நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 66 திரைப்படத்தினை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு இந்த படத்தை தயாரிப்பதன் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தின் நடிகர், நடிகை தேர்வு நடைபெற்று வந்த நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் இத்திரைப்படத்தில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு பேட்டியின் போது பீஸ்ட் பட நடிகருடன் விரைவில் இணைவேன் என்று கூறியுள்ளார். ஏற்கனவே பிரகாஷ்ராஜ் இயக்குனர் வம்சி இயக்கத்தில் பிருந்தாவனம், தோழா, மகரிஷி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் விஜய்யுடன் கில்லி, போக்கிரி, சிவகாசி மற்றும் வில்லு போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். இவர்களின் கூட்டணி ரசிகர்களால் ரசிக்கப்பட்டு மிகுந்த வரவேற்ப்பை பெற்றது.

நீண்ட இடைவேளைக்குப் அதாவது கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து பிறகு பிரகாஷ்ராஜ், விஜயுடன் இணைவது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இவர்களின் முந்தைய படங்களைப்போல இப்படமும் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

vijay-prakashraj
vijay-prakashraj
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்