ரஜினியால் பொங்கலுக்கு தள்ளிச் சென்ற தளபதி 65.. ஆனால் அங்க தான் பெரிய ஆப்பு இருக்கு!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிக பெரிய எதிர்பார்ப்பில் இருந்த அண்ணாத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வருகின்ற 2021 தீபாவளிக்கு என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தளபதி ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றத்தில் இருக்கின்றனர். எப்படியும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தளபதி 65 படத்தையும் தீபாவளிக்கு வெளியிடாது.

காரணம் இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இந்நிலையில் தளபதி 65 திரைப்படம் வருகின்ற 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக சன் பிக்சர்ஸ் வட்டாரங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் விஜய் இந்த வருடமே தளபதி 65 படத்தை ரிலீஸ் செய்துவிட வேண்டும் என உக்கிரமாக இருக்கிறாராம்.

rajini-annaththe
rajini-annaththe

அதற்கு தகுந்தாற்போல் தளபதி65 படத்திற்கு வெறும் 55 முதல் 60 நாட்கள் மட்டுமே கால்சீட் கொடுத்துள்ளாராம். அதாவது கிட்டதட்ட 2 மாதம். விஜய் சமீபகாலமாக தான் நடிக்கும் படங்களுக்கு 100 நாட்கள் வரை கால்ஷீட் கொடுத்து வந்த நிலையில் தளபதி65 படத்திற்கு வெறும் 60 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளது தளபதியின் அடுத்தடுத்த ரிலீசுக்கு வேகத்தை காட்டுகிறது.

மார்ச் மாதம் துவங்கும் தளபதி65ன் படப்பிடிப்பு மே மாதம் அல்லது ஜூன் முதல் வாரத்தில் மொத்தமாக முடிக்கப்பட்டு விடுமாம். அதனைத் தொடர்ந்து ஜூன் 22ஆம் தேதி தளபதி65 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.

thalapathy65-cinemapettai
thalapathy65-cinemapettai

முடிந்தவரை தளபதி65 படத்தை 2021 ஆம் ஆண்டே வெளியிட வேண்டுமென தளபதி கட்டளையிட்டால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வருகின்ற ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறையை குறி வைக்குமாம். ஒருவேளை பொங்கல் வரை தளபதி 65 படம் சென்றால் அதே தேதியில் பிரபாஸ் நடிக்கும் கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் உலக அளவில் தென்னிந்தியாவில் யார் நம்பர் 1 என்ற தேவையில்லாத போட்டி ஏற்படும் என்பதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் யாருக்கும் பாதகமில்லாமல் முன்கூட்டியே வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்