வசூலில் மண்ணைக் கவ்விய லாபம், தலைவி.. இந்திய அளவில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்

நாடு முழுவதும் அதிகரித்து வந்த கொரோனா நோய் தொற்று காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனை அடுத்து சமீபத்தில் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்தது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் திரையரங்குகள் திறக்கப்படுவதாலும், பெரிய திரையில் தங்களுக்கு பிடித்தமான நடிகர்களைப் பார்த்து பல நாட்களானதாலும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையரங்கிற்கு சென்றனர்.

ஆனால் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் தற்போது வெளியாகவில்லை. இதற்கு பதிலாக மிகவும் எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் படமான தலைவி படமும், மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மறைந்த இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் உருவான இறுதி படமான லாபம் படமும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டன.

ஆனால் இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை. மாறாக ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே அளித்தன. அதிலும் லாபம் படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. அதேபோல் எதிர்ப்பார்த்த வசூலும் படத்திற்கு வரவில்லை. தற்போது வரை சுமார் 6 கோடி வரை இப்படம் வசூல் பெற்றிருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதேபோல் தலைவி படமும் தற்போது வரை எதிர்மறையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. வெளியான 3 நாட்களில் தலைவி படம் உலகம் முழுவதும் வெறும் 4.86 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. மேலும் ஹிந்தியில் வெளியான தலைவி படம் அங்கு 3 நாட்களில் சுமார் 1 கோடி வசூலித்துள்ளது. இந்தியில் வெளியான முதல் நாள் ரூ .25 லட்சமும், இரண்டாம் நாள் ரூ .30 லட்சமும், மூன்றாம் நாள் ரூ .45 லட்சமும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

laabam-thalaivi
laabam-thalaivi

தமிழ் படங்கள் வசூலில் சொதப்பி இருந்தலும், தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட ஹாலிவுட் படங்கள் வசூலில் சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்