கமலுக்கு உதவ போய் தலைவருக்கு மாஸாக கிடைத்த டயலாக்!  சென்டிமென்ட்டா காப்பி அடிக்கும் லோகி

Thalaivar get a dialogue by helping Kamal: தலைவா என்றதுமே வைப் அடிப்பது போல் மாஸ் இமேஜ் உருவாக்கி வைத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

வயது என்பதை தடையாக கொள்ளாமல் இளம் தலைமுறைக்கு டப் கொடுக்கும் தலைவருக்கு எப்போதும் ஏறு முகம் தான். தற்போது ஜெய் பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் பிசியாக உள்ளார் தலைவர்.

வேட்டையன் படப்பிடிப்பை முடித்து தலைவர் 171 காக லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி சேர உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 

சன் பிக்சர்ஸின் பிரம்மாண்டமான தயாரிப்பில் தரமான கேங்ஸ்டர் ஸ்டோரியில் இணைய உள்ளார் தலைவர். சமீபத்தில் வெளியான டைட்டில் டீசரில் பல சூசகமான செய்திகளை ஒளித்து வைத்துள்ளார் லோகேஷ்.

இது இயக்குனரின் LCU கான்செப்டில் வராது என்று கூறிய போதும், ரசிகர்கள் டீசரை பார்த்து தலைவர் 171 இல் ரஜினியின் கெட்டப், ரோலக்ஸ் இன் தந்தையாக இருக்குமோ என பல ஊகங்களை கூறி வருகின்றனர்.

 டீசரில் அனல் பறக்கும் சண்டைக் காட்சியில், ரஜினி பேசும் டயலாக்குகள் அப்படியே கிட்டத்தட்ட 45 வருஷத்துக்கு முன்னாடி வந்த பாலச்சந்திரரின் நினைத்தாலே இனிக்கும் படத்தில்  இடம்பெற்ற பாடல் வரிகள் தான்.

ஜகமே தந்திரம் என்ற பாடலை எம் எஸ் விஸ்வநாதன் ரஜினிக்காக பாடி கொடுத்திருந்தார். அப்பாவும், தாத்தாவும் வந்தார்கள்! போனார்கள்!

தப்பென்ன சரியென்ன! எப்போதும் விளையாடு !அடப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே! எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே!

வாழ்க்கைக்கான ஒவ்வொரு தத்துவமும் ஒரே பாடலில் இடம்பெற்று இருக்கும்.  இத்திரைப்படத்தில் கமல் வர தாமதமாகும் நேரத்தில், அரங்கில் ஏற்படும் கூச்சலை தவிர்க்கும் பொருட்டு கமலுக்கு உதவுவதற்காகவே ரஜினி இந்த பாடலை பாடி மாஸ் காட்டி இருப்பார்.

ஆனால் இந்த பாடல் 45 வருடங்களுக்கு பின்பு புதிய பொலிவுடன் வைரலாகி வருகிறது. இதே டயலாக் ரங்கா திரைப்படத்திலும் இடம்பெற்று இருக்கும் என்பது கூடுதல் தகவல். 

வரிகள் மட்டுமின்றி படத்தின் தலைப்பு கூட ஏற்கனவே இரு முறைகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்டது தான்.

லோகேஷ் கனகராஜ் உடன் இணையும் தலைவர் 171 படத்தின் தலைப்பு கூலி

20 வருடங்களுக்கு முன் அமிதாப்பச்சன் ஹிந்தியில் நடித்த படத்திலும், தமிழில் சரத்குமார் நடித்த படத்திலும் இதே டைட்டில் பயன்படுத்தப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

அது மட்டும் இன்றி தெலுங்கிலும் வெங்கடேஷ் நடித்த ஒரு  படத்தின் தலைப்பும் கூலி நம்பர் ஒன்.

படத்திற்காக அதிக மெனக்கெடுக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டைட்டில் விஷயத்தில் என்னவோ பழைய தலைப்பை புதுப்பித்து விட்டார் என்றே  தோன்றுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உழைப்பாளி மற்றும் தீ போன்ற படங்களில்  கூலியாக நடித்திருந்து தொழிலாளர்கள் இடையே கொண்டாடப்பட்டார் என்பது நாடறிந்த செய்தி.

உழைக்கும் வர்க்கத்தினர் இந்த கூலியை கொண்டாட தவற மாட்டார்கள் என்ற நோக்கத்தோடு கூட இதன் தலைப்பு அமைந்திருக்கலாம் என்று கூறுகின்றனர் சினிமா ஆர்வலர்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்