தல 61 வினோத்துக்கு, தல 62 உங்களுக்கு, என்ன நான் சொல்றது.. சென்சேஷனல் இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த அஜித்

வலிமை படத்திற்கு பிறகு அடுத்ததாக அஜித் நடிக்கும் தல 61 திரைப்படத்தை மீண்டும் வினோத் இயக்க உள்ள செய்தி சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது.

ஆனால் அந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறாரா அல்லது கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் தயாரிக்கிறாரா என்பது குளறுபடியாக உள்ளது. இருந்தாலும் படத்தின் படப்பிடிப்புகள் வருகிற ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளன.

வலிமை படமே இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு பாக்கியுள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே தல 61 படத்தையும் தொடங்கி விடலாம் என வினோத்துக்கு தல அஜித் கூறியதாகவும், அதனைத் தொடர்ந்து தல 61 படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் வினோத் உள்ளதாகவும் தல வட்டாரங்களிலிருந்து செய்திகள் வந்துள்ளன.

இது ஒருபுறமிருக்க ஏற்கனவே தல 61 படத்திற்காக அஜீத்திடம் கதை சொன்ன இயக்குனர் ஒருவரை தல 62 படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறுகின்றனர். இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

தல 61 படத்தை இயக்குவதற்காக சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா தல அஜித்திடம் ஒரு கதை கூறினார் என்ற செய்தி வெளியானபோதே தல ரசிகர்கள் இந்த கூட்டணியை பெரிதும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அஜித் மீண்டும் வினோத்துடன் தல 61 படத்தில் இணைந்து விட்டார். இருந்தாலும் தல 62 படத்தை சுதா கொங்கரா தான் இயக்க வேண்டும் என அஜித் கூறிவிட்டதாக தெரிகிறது. மேலும் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் அடுத்தடுத்து தொடங்க உள்ளதால் இருவருமே கதையுடன் ரெடியாக இருக்குமாறு அறிவுறுத்தி விட்டாராம் தல அஜித்.

ajith-sudha-kongara-thala62
ajith-sudha-kongara-thala62