இனி அப்படி நடிக்கவே மாட்டேன்னு சொன்ன அஜித்.. வினோத் கதைக்கு ஓகே சொல்லிட்டாராம்!

சினிமா பின்புலம் இல்லாமல் தன்னுடைய நடிப்பு திறமையினால் எக்கச்சக்கமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக விளங்கும் தல அஜித்தின் வலிமை திரைப்படத்தின் ரிலீசுக்காக தற்போது அவருடைய ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.

எனவே ஹெச் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து முடித்த திரைக்கு தயாராகியுள்ள வலிமை படத்தை தொடர்ந்து, மற்றொரு படத்திலும் தல அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அத்துடன் இந்தப் படத்தில் தல அஜித் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறாராம்.

அதுவும் கடந்த 1999ஆம் ஆண்டு வெளிவந்த வாலி படத்தில் வில்லனாக நடித்தது போல், ஹெச் வினோத் இயக்கத்தில் மீண்டும் அஜித் வில்லனாக நடிக்கவுள்ளாராம். ஆனால் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மங்காத்தா படத்தில் தல அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த பின்பு இனிமேல் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதில்லை என்று தல அஜித் கூறியிருந்தார்.

ஆனால் தற்போது ஹேச் வினோத் சொன்ன நெகட்டிவ் கதாபாத்திரம் தல அஜித்துக்கு ரொம்ப பிடித்திருக்கிறதாம். ஆகையால் வலிமை படத்தைத் தொடர்ந்து தல அஜித்துடன் கூட்டு சேர்ந்து வித்தியாசமான படத்தை உருவாக்க ஹேச் வினோத் திட்டமிட்டுள்ளார்.

இந்தத் தகவலை அறிந்த தல ரசிகர்கள் தல அஜித் வில்லனாக நடிக்கப் போகும் படத்தை குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் உள்ளனர். தற்போது தல அஜித் தன்னுடைய உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக மாற்றுவதற்கு ஜிம்மில் கடுமையாக முயற்சித்து உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

ajith kumar
ajith kumar

சமீபத்தில் அத்தகைய புகைப்படம் வைரலானது. எனவே அடுத்த படத்திற்காக ஹெச் வினோத் சொன்ன நெகட்டிவ் ரோல்காக உடல் அமைப்பை தல அஜித் மாற்றிக் அமைத்து கொண்டிருக்கிறார் என்றும் ரசிகர்கள் யூகிக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்