டை அடித்த தலை, கொஞ்சமாக முளைத்த நரைத்த தாடி.. வைரலாகும் தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்

தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகராக வலம் வருபவர் தல அஜித். ஒரு நடிகர் தொடர்ந்து பல படங்கள் தோல்விப் படம் கொடுத்த பிறகும் இவ்வளவு ரசிகர் பட்டாளம் இருக்குமா என அனைத்து மொழி நடிகர்களையும் ஆச்சரியப்பட வைத்தவர் தான் தல அஜித்.

ஒரு காலத்தில் தொடர் தோல்வி படங்களை எடுத்தாலும் தன்னுடைய விடா முயற்சியால் தற்போது தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். படம் நன்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல் வசூலும் தாறுமாறாக இருந்து வருகிறது.

அதற்கு சாட்சியாக கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்தை குறிப்பிட்டு சொல்லலாம். அதனைத் தொடர்ந்து வெளிவந்த நேர்கொண்டபார்வை படமும் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் தல அஜித் அடுத்ததாக வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம்ஒன்று போன்ற படங்களை இயக்கிய வினோத் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் இயக்கி வருகிறார்.

தல அஜித் போலீசாக பல படங்களில் நடித்திருந்தாலும் வலிமை படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமான கதாபாத்திரம். அதுமட்டுமில்லாமல் அதிரடி கலந்த வலிமை திரைப்படம் வெளியான பிறகு இந்திய அளவில் அஜித்தின் மார்க்கெட் பல மடங்கு உயரும் என்கிறார்கள் வலிமை வட்டாரங்கள்.

விரைவில் வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் தல அஜித்தின் சமீபத்திய புகைப்படம் ஒன்று ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. அந்த புகைப்படத்தில் தல அஜித் கொஞ்சம் வயதானவர் போல் இருப்பது தான். வயதானாலும் சிங்கம் சிங்கம் தானே!

ajith-valimai-cinemapettai
ajith-valimai-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்