வாத்தி விஜய் காஸ்டியூமில் தல அஜித்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் கோட் சூட் அணிந்து வந்திருந்தார். வந்திருந்த தொகுப்பாளர் அதுபற்றி கேட்டபோது, சும்மா நண்பர் அஜித் மாதிரி வரலாம்னு ஆசைப்பட்டேன் என்று கூறியிருந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

விஜய்யின் மாஸ் என்ன என்பதை இந்திய சினிமாவுக்கே எடுத்துரைத்த திரைப்படங்களில் மாஸ்டர் படம் முக்கிய இடத்தை பெறுகிறது. இந்த ஊரடங்கு சமயத்தில் ஒரு பெரிய படம் வெளியானால் எப்படி வசூல் செய்யும் என்ற கேள்வி அனைவரிடமும் இருந்தது.

ஆனால் அதையெல்லாம் தவிடுபொடியாக்கி வெறும் 50% பார்வையாளர்களை மட்டுமே வைத்துக்கொண்டு மாஸ்டர் படம் 200 கோடிகளுக்கும் மேல் வசூல் சாதனை செய்தது. அதுவும் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் படம் செய்ததை அடுத்ததாக வலிமை படம் செய்ய வேண்டும் என்பதே அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அப்போது தான் அஜித்தின் மாஸ் என்பது வெளி உலகத்திற்கு தெரியுமாம்.

மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே வரவேற்பை பெற்றாலும் வாத்தி ரைடு என்ற பாடலுக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு. இந்த பாடலில் விஜய் நீல நிற சட்டையும், கருப்பு நிற பேண்ட்டும் அணிந்து டிப்டாப்பாக இருப்பார்.

தற்போது அதே போல் கெட்டப்பில் தல அஜித்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னுடைய குட்டி ரசிகர் ஒருவரை சந்தித்து அஜித்தின் புகைப்படம் நேற்று இணையத்தில் வெளியானது.

thala-ajith-latest-cinemapettai
thala-ajith-latest-cinemapettai

அதில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் விஜய் பயன்படுத்திய உடை போலவே அஜித்தின் உடையும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் வலிமை படம் விரைவில் வெளியாக உள்ளது. வருகின்ற ஜூலை 15ஆம் தேதி வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாக உள்ளதாம்.

- Advertisement -