எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பத்து 2ம் பாகம் படங்கள்.. புதுப்பேட்டை முதல் பொன்னியின் செல்வன் வரை

சினிமாவை பொறுத்த வரையிலும் டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவிட்டால், ரசிகர்கள் அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தையும் எதிர்பார்ப்பது என்பது சாதாரணமான ஒன்றுதான். அந்த வகையில் இதற்கு முன் வெளியான இரண்டாம் பாக படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி கண்டது. அதேபோன்று இன்னும் சில படங்களின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில் எதிர்பார்ப்பை எகிரவிட்ட 10 இரண்டாம் பாக படங்கள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.

சந்திரமுகி2: பி வாசு இயக்கத்தில் ரஜினி, பிரபு, நயன்தாரா, ஜோதிகா நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. மேலும் இப்படம் மாபெரும் வெற்றி பெற்று அதிக நாட்கள் திரையரங்கில் ஓடி வசூல் சாதனை படைத்தது. தற்பொழுது 17 வருடங்கள் கழித்து இதன் இரண்டாம் பாகம் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இதில் ரஜினி நடித்த கதாபாத்திரத்தில் தற்பொழுது ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். இருந்தாலும் ரஜினிக்கு கிடைத்த ஆதரவு ராகவா லாரன்ஸ்க்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

புதுப்பேட்டை 2: செல்வராகவன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் புதுப்பேட்டை. காலங்கள் கடந்து கொண்டாடப்பட்ட இப்படத்திற்கான இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கூடிய விரைவில் புதுப்பேட்டை 2 படத்தை இயக்கவிருப்பதாக செல்வராகவன் தெரிவித்திருந்தார்.

Also Read: சந்திரமுகி 2 முதல் ஜிகர்தண்டா 2 வரை மொத்தம் 13 படங்கள்..1000 கோடிக்கு மேல் பிசினஸில் முதலீடு செய்யும் நிறுவனம்

கைதி2: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கைதி. அதிலும் காவல் துறையினரை ஒரு கைதி காப்பாற்றுகிறார் என்பதை இயக்குனர் தனது திரைக்கதையின் மூலம் விளக்கிய விதம் பலரையும் மிரள வைத்தது. அதுமட்டுமல்லாமல் இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்பொழுது கைதி2 படத்தின் இரண்டாம் பாகம் திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

பொன்னியின் செல்வன் 2: மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் பொன்னியின் செல்வன். கடந்த வருடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்பொழுது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஏப்ரல் 28ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. 

டிமான்டி காலனி 2: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. இதில் அருள்நிதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் அருள்நிதி கதாநாயகனாக நடித்து வருகிறார், இதில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் திரில்லர் கதையாக அமைந்துள்ள இப்படம்  விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 

விடுதலை 2: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் காமெடி நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் விடுதலை. மேலும் பல வருட எதிர்பார்ப்பிற்கு பிறகு மார்ச் 31ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமும் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: ஹீரோவான சூரியின் அடுத்தடுத்த 4 ப்ராஜெக்ட்.. விடுதலை படத்தால் அடித்த ஜாக்பாட்

சார்பட்டா பரம்பரை 2: பா ரஞ்சித் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இதில்  ஆர்யா உடன் ஜான் கொக்கன், பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும்  சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.

ஆயிரத்தில் ஒருவன் 2: செல்வராகவன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான வரலாற்று திரைப்படமாகும். அதிலும் சோழர்களின் ஆட்சிக் காலத்தை மையமாக வைத்து படமானது வெளியானது. அதிலும் காலங்கள் கடந்த பின் கொண்டாடப்பட்ட  இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் தனுஷ் இணைந்து நடிக்க உள்ளார்.

இந்தியன் 2: சங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். இதில் கமலஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. இதனை அடுத்து மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பானது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு இப்படம் வெளியாக உள்ளது.

வடசென்னை 2: வெற்றிமாறன் இயக்கத்தில் 2018 ஆம் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வடசென்னை. அதிலும் வடசென்னை பகுதியில் உள்ள மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படமானது வெளியானது. இப்படம்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் வடசென்னை இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Also Read: செல்வராகவன் இயக்கத்தில் படுதோல்வி அடைந்த 5 படங்கள்.. பார்த்து பார்த்து செதுக்கியும் பயனில்லை

- Advertisement -