இந்த விடுமுறையை கொண்டாட மார்ச் இறுதியில் வெளியாக உள்ள 10 படங்கள்.. மிரட்ட வரும் காட்ஸில்லா காங்

Ten films releasing at the end of March 2024: தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு  இந்த மார்ச் மாதத்தில் வரவிருக்கும் வாரங்களில் கிட்டத்தட்ட பத்து படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. இதில் அந்நிய மொழி படங்களும் கூடவே ரீ ரிலீஸ் ஆகும் படங்களும் அடங்கும்.

  1. ஆடுஜீவிதம்: மலையாளத்தில் பல வருடங்களாக  பல்வேறு தடைகளை தாண்டி உருவாக்கப்பட்டு வரும் படம் தான் பிருத்விராஜின் ஆடுஜீவிதம். வித்தியாசமான கதை அம்சத்தில் பிளஸ்ஸி இயக்கத்தில் பிருத்திவிராஜுடன் அமலா பால் ஜோடி சேர்ந்துள்ளார். 
  2. Godzilla X Kong The New Empire: மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸ் வேலைகளுடன் ஆடம் விங்கார்ட் இயக்கத்தில் உருவான திரைப்படம்  தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் டப் செய்து ரிலீஸ் ஆக உள்ளது. 
  3. தி பாய்ஸ்: சந்தோஷ் பீட்டர் ஜெயக்குமார் இயக்கி நடிக்கும் தி பாய்ஸ் திரைப்படம் மார்ச் 29 ரிலீசாக உள்ளது.  
  4. கா: நாஞ்சில் இயக்கத்தில் கா திரைப்படத்தில் ஆக்சன் நாயகியாக உருவெடுத்துள்ளார் ஆண்ட்ரியா. வைல்டு லைஃப் போட்டோகிராபராக ஆண்ட்ரியா சந்திக்கும் போராட்டங்களே இந்த கா
  5. இடி மின்னல் காதல்: மிஷ்கினின் உதவி இயக்குனர் பாலாஜி மாதவனின் இயக்கத்தில் உருவாகும் வித்தியாசமான காதல் கதை தான் இடி மின்னல் காதல். இம்மாத இறுதியில் ரிலீஸ் ஆக உள்ளது.
  6. வெப்பம் குளிர் மழை: பாஸ்கல் வேதமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள குடும்ப பாங்கான திரைப்படம் வெப்பம் குளிர் மழை.  பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மார்ச் 29 தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது.
  7. பூமர் அங்கிள்: யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், ஓவியா, விஜய் டிவி புகழ் பாலா என பலரும் நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படம்  ஆகும். கோடை விடுமுறையை ஒட்டி இம்மாத இறுதியில் குதூகலப்படுத்த வருகிறது பூமர் அங்கிள்.
  8. நேற்று இந்த நேரம்: பிக் பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன், மோனிகா ஹரிதா நடிப்பில் உருவான நேற்று இந்த நேரம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. பல தாமதத்திற்கு பின் இம்மாத இறுதியில் உறுதியாக வெளிவர உள்ளது 
  9. ஹாட்ஸ்பாட்: மோசமான கதை அம்சத்தில் மக்களை சுற்றி நடக்கும் அரசியலை மையமாகக் கொண்டு  கலையரசன், கௌரி கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ஹாட் ஸ்பாட் மார்ச் 29 ரிலீசாக உள்ளது.
  10. அழகி: தங்கர் பச்சான் இயக்கத்தில் பார்த்திபன், தேவயானி, நந்திதா தாஸ், நடிப்பில் வெளிவந்த கவித்துவமான காவிய திரைப்படம் அழகி புதிய தொழில்நுட்பத்துடன் மீண்டும் இம்மாத இறுதியில் ரீ ரிலீஸ் ஆக உள்ளது
Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்