சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

விஜய்யுடன் நடிக்கபோகும் சூப்பர் ஸ்டார்.. அதிர்ச்சி கூட்டணியை அறிவிக்கப் போகும் வாரிசு டீம்

வழக்கம்போல் அடுத்த நடிகர் இணைய இருக்கிறார். எந்த படம் என்று எல்லோருக்கும் தெரியும், ஆம் விஜய் நடிக்கும் வாரிசு படம்தான். தினம்தோறும் ஒரு நடிகர் இணைகிறார். அப்படி என்ன படமாக இருக்கும் என வியப்பிலும் ஆச்சரியத்திலும் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

தளபதி விஜய்யும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவும் ஒரே பிரேமில் ஒன்றாக திரையில் தோன்றினால் எப்படி இருக்கும், ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இது. விஜய்-மகேஷ் பாபு கூட்டணியை பற்றிய அறிவிப்பு மகேஷ் பாபுவின் பிறந்தநாளான இன்று வெளியாக உள்ளது.

இந்த இரு நாயகர்களும் வசூல்களை அள்ளி குவிக்கும் கதாநாயகர்கள். மேலும் மகேஷ் பாபு வின் படங்களை ரீமேக் செய்து விஜய் நடித்து இருக்கிறார், விஜய்யின் படங்களை ரீமேக் செய்து மகேஷ் பாபுவும் நடித்து இருக்கிறார்.

இந்த இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தால் கண்டிப்பாக வசூல் களைகட்டி விடும், மேலும் இவர்கள் இருவரையும் சேர்த்து படம் பண்ணினால் அது கண்டிப்பாக பான் இந்தியா படமாக தான் இருக்கும்.

விஜய்யுடன், மகேஷ் பாபு சேர்ந்து நடிக்க இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி கொண்டு தான் இருக்கின்றன. விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் வாரிசு படத்தில் இணைந்ததில் இருந்தே மகேஷ் பாபு வும் இந்த படத்தில் இருப்பார் என வியூகங்கள் எழுந்து கொண்டு தான் இருந்தன.

தற்போது இதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று மாலை 6.30 மணிக்கு அதிகாரபூர்வ அறிவுப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.மகேஷ் பாபுவின் பிறந்தநாளில் வெளியாகும் செய்தி இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய விருந்தாக இருக்கும்.

- Advertisement -

Trending News