ரிலீசுக்கு முன்னரே பல கோடி லாபம் பார்த்த 5 படங்கள்.. முதல் இரண்டு இடத்தை பிடித்த ராஜமௌலி

தெலுங்கு சினிமாவில் படங்கள் வெளியிடுவதற்கு முன்பே படத்தின் ஆன வணிகம் வளர்ந்து வருகிறது. அவர் தெலுங்கில் முன்னணி ஹீரோக்களாக உள்ள நடிகர்களின் படங்கள் ரிலீசுக்கு முன்பே பல கோடிக்கு விற்பனையாகியுள்ளது. அவ்வாறு ரிலீசுக்கு முன்பே டாப் பிசினஸ் செய்த ஐந்து படங்களை பார்க்கலாம்.

ஆர்ஆர்ஆர் : பாகுபலி இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆர் ஆர் ஆர். இப்படத்தின் ரிலீஸ் பலமுறை தள்ளிப்போனது. இப்படம் மார்ச் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில் ரிலீசுக்கு முன்பே 211 கோடி விற்பனை செய்துள்ளது.

பாகுபலி 2 : ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் ராணா டகுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் பாகுபலி 2. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதிலிருந்து கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற கேள்வியால்ன பாகுபலி 2 படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்தது. இப்படம் ரிலீசுக்கு முன்பே 122 கோடி விற்பனையானது.

சாஹோ : சுஜிஷ் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய் மற்றும் பலர் நடிப்பில் உருவான திரைப்படம் சாஹோ. இப்படம் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது. சாஹோ படம் ப்ரீ ரிலீசுக்கு முன்பே 121 கோடி விற்பனையானது. இப்படம் ரிலீஸ் ஆன பிறகு எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

சைரா : சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா, சுதீப், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் சைரா நரசிம்மா ரெட்டி. இப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்திருந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அதுமட்டுமல்லாமல் அமிதாபச்சன் மற்றும் அனுஷ்கா செட்டி இருவரும் விருந்தினராக நடித்திருந்தனர். இதனால் இப்படம் ரிலீசுக்கு முன்பே 106 கோடி விற்பனையானது.

ராதே ஷ்யாம் : பிரபாஸ் மற்றும் பூஜா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருந்த படம் ராதே ஷ்யாம். இப்படத்தில் எதிர்காலத்தை கணித்துச் சொல்லும் கைரேகை நிபுணராக பிரபாஸ் நடித்திருந்தார். இப்படம் 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இருந்தது. இப்படம் ரிலீசுக்கு முன்பே 105 கோடி விற்பனை ஆனது.