சம்பாதிக்க புது ரூட்டை கண்டுபிடித்த விஜய், சிவகார்த்திகேயன்.. சத்தமில்லாமல் வச்சாங்க பாரு பெரிய ஆப்பு!

கோலிவுட் நடிகர் சிலருக்கு இப்போது தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் தங்களுடைய படங்களை ரிலீஸ் செய்து சம்பாதிக்க ஆசை வந்துவிட்டது. பொதுவாக தமிழ் படங்களை கேரளாவில் ரிலீஸ் செய்யும் போது ஓரளவுக்கு கல்லா கட்டும். நடிகர் விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம் உண்டு. இப்போது புதிய டிரண்டாக கேரளாவை தாண்டி தெலுங்கில் முயற்சி செய்து வருகிறார்கள் நம் ஹீரோக்கள்.

நடிகர் விஜய்யும் , சிவகார்த்திகேயனும் இப்போது இந்த ஒரே ரூட்டில் தான் பயணித்து வருகிறார்கள். முதலில் தங்களது படங்களை டப்பிங் செய்து தெலுங்கில் ரிலீஸ் செய்தார்கள். இப்போது சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்தார். அது போல விஜய் தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்திருக்கிறார்.

Also Read: விஜய் ரசிகர்களுக்கு சூசகமாக அறிவுரை சொன்ன அஜித்.. இதுதான் வாழைப்பழத்தில் ஊசி ஏத்துறதா!

தெலுங்கு இயக்குனர்களின் படங்களில் நடித்து அப்படியே தெலுங்கிலும் மார்க்கெட்டை பிடித்து ஒரு ரவுண்டு வந்து சம்பாதித்து விடலாம் என மிகப் பெரிய மாஸ்டர் பிளானில் இருந்தார்கள். இப்படியெல்லாம் சம்பாதிக்க நினைத்தவர்களுக்கு இப்பொழுது ஒரு மிகப்பெரிய அடி விழுந்து இருக்கிறது. இதனால் இப்போது முதலுக்கே மோசம் வந்துவிட்டது.

தளபதி விஜய்யின் வாரிசு படம் வரும் பொங்கலன்று ரிலீஸ் பண்ண திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி இருப்பதால் தெலுங்கிலும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம் என திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் தெலுங்கு சினிமா இண்டஸ்ட்ரியில் நேரடி தமிழ்ப் படங்களை பண்டிகை காலத்தில் ரிலீஸ் செய்யக்கூடாது என்று சட்டம் போட்டுள்ளனர்.

Also Read: ஒட்டுமொத்த வசூலையும் வாரி துண்ணலாம் என நினைத்த விஜய்.. ஆசையில் மண் அள்ளிப் போட்ட அஜித்.!

பொங்கல் பண்டிகையை குறிவைத்து வசூலை வாரி விடலாம் என கனவில் இருந்த வாரிசு படக்குழுவுக்கு இப்போது மொத்தமாய் இடி இறங்கியது போல் இருக்கிறது. மேலும் தெலுங்கில் நடிகர்கள் அதிகம் சம்பளம் வாங்குவதை எதிர்த்து வேற போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்வதும் பயங்கர சிக்கல் தான்.

இப்படி அடுக்கடுக்காக அங்கே பயங்கர பிரச்சனைகள் வந்து கொண்டிருப்பதால், தெலுங்கில் ஒரு ரவுண்ட் வந்து மார்க்கெட்டை அள்ளி விட நினைத்த விஜய், சிவகார்த்திகேயனுக்கு இது பெரிய ஆப்பாக அமைந்து விட்டது. இன்றைய சூழ்நிலையில் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு ஆந்திராவில் ரிலீஸ் ஆகுமா என்பது பெரிய சந்தேகம் தான்.

Also Read: முக்கிய மாவட்டங்களை சூழ்ச்சி செய்து வளைத்துப் போட்ட உதயநிதி.. வாரிசு வசூலை சுக்குநூறாக்க போகும் அஜீத்

Stay Connected

1,170,265FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -