மாநாடு திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க விரும்பும் நடிகர்.. படத்தை பார்த்து மிரண்டு விட்டாராம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் படம் மாநாடு. டைம் லூப் என்ற புதுமையான கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத் திரைப்படம் ரசிகர்களிடையே பேராதரவை பெற்று வருகிறது.

மாநாடு திரைப்படம் சிம்பு நடித்த திரைப்படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. சினிமா பிரபலங்கள் பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரையும் பாராட்டி வருகின்றனர்.

எஸ் ஜே சூர்யாவை தவிர வேறு யாராலும் இந்த கதாபாத்திரத்தை இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியாது என்று ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவிக்கின்றனர். மாநாடு திரைப்படம் இதற்கு முன் வசூலில் சாதனை புரிந்த பல திரைப் படங்களின் சாதனையை முறியடித்துள்ளது.

இப்படம் தமிழ்நாட்டைத் தொடர்ந்து கேரளாவிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்து வருகிறது. தற்போது இந்த படத்தை ஹிந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்வதற்கு பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தெலுங்கு உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ரவி தேஜா. இவருடைய பல படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. அவர் மாநாடு திரைப்படத்தை பட குழுவினரோடு பார்த்துள்ளார்.

படத்தை பார்த்த ரவி தேஜா இயக்குனரின் புத்திசாலித்தனமான கதையையும், சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யா வின் நடிப்பையும் பார்த்து மிரண்டு விட்டாராம். அந்த அளவுக்கு திரைப்படம் மிகவும் அற்புதமாக வந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் ரவி தேஜா மாநாடு திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநாடு திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கு பல தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருகின்றனர். இப் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை யார் பெறுவார்கள் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

raviteja
raviteja
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்