ரஜினிக்கு வில்லனாக நடிக்க 2 கோடி சம்பளம் கேட்ட நடிகர்.. இந்த உருட்டு கொஞ்சம் ஓவரா இல்லையா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்தே திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரஜினிக்கு இது ரொம்பவும் முக்கியமான படம் என்று சொல்லலாம். இதற்கு காரணம் அவரின் முந்தைய 2 படங்கள் மக்களிடையே கலமையான விமர்சனத்தை பெற்றதுதான். அதிலும் அண்ணாத்தே ரஜினி ரசிகர்களுக்கே பிடிக்காமல் போனது.

இதனால் அடுத்த படத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் ரஜினி இருக்கிறார். அதற்காகத்தான் இளம் இயக்குனரான நெல்சனுக்கும் அவர் வாய்ப்பு கொடுத்தது. நெல்சனுக்கும் அதே நிலைமைதான். கண்டிப்பாக இந்தப் படத்தில் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற நிலைமையில் தான் இருக்கிறார்.

Also Read: வரிசையாக கதை கேட்கும் ரஜினிகாந்த்.. அடுத்த படத்தை இயக்க காத்திருக்கும் 5 இயக்குனர்கள்

இதனால் இவர்கள் இருவருமே படத்தின் வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகிறார்கள். சாதாரணமாக தொடங்கப்பட்ட இந்தப் படம் தற்போது பான் இந்தியா படமாக பிரம்மாண்டமாக உருவாகிக்கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. நெல்சன் இதுவரை செய்யாத புதிய முயற்சியை இதில் கையாண்டு இருக்கிறார்.

அதாவது மலையாள உலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் ஆகியோரை இந்தப் படத்தில் இணைத்திருக்கிறார் இயக்குனர் நெல்சன். தற்போது புதிய வரவாக இந்தப் படத்தில் இணைந்திருப்பவர் தான் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியடைந்த புஷ்பா திரைப்படத்தின் நடிகர் சுனில்.

Also Read: தோல்வி பயத்தில் ரஜினி, வரிசை கட்டும் இத்தனை பேர் .. நீண்டு கொண்டே போகும் இயக்குனர்கள் பட்டியல்

நடிகர் சுனில் செயலர் படத்தில் இணைந்திருப்பது படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்தப் படத்தில் சுனில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்தப் படத்தில் நடிப்பதற்கு நடிகர் சுனிலுக்கு இரண்டு கோடிக்கு மேல் சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் இந்த சம்பள விவகாரம் பற்றி உறுதியாக எந்த தகவலும் வெளியாகவில்லை என்பதால் சுனிலுக்கு 2 கோடிக்கு மேல் சம்பளம் என்பது வதந்தியாகவே இன்னும் உள்ளது. இருந்தாலும் பட வெற்றிக்காக படக்குழு எந்த அளவுக்கு இறங்கலாம். இருந்தாலும் நடிகர் சுனிலின் இந்த சம்பள விவரம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாக உள்ளது.

Also Read: பக்கா பான் இந்தியா மூவி என நிரூபித்த நெல்சன்.. நான்கு ஸ்டேட்களில் இருந்து வரும் 4 டாப் ஸ்டார்கள்