3வது பெரிய கட்சியாக உருவெடுக்கும் நாம் தமிழர்.. சீமான் அடித்து கூறிய வாக்கு எண்ணிக்கை கிடைத்ததா.?

திமுக அதிமுக போன்ற இரண்டு பெரிய கட்சிகளுக்கு இடையே தற்போது 3வது கட்சியாக உருவெடுத்து வருகிறது நாம் தமிழர்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சீமான் எதிர்பார்த்த ஓட்டு எண்ணிக்கை கிடைக்கவில்லையாம். ஆனால் கிட்டத்தட்ட 178 தொகுதிகளிலும் 3வது இடத்தை பிடித்து பெருவாரியான வாக்குகளை பெற்றுள்ளது.

அதாவது கடந்த முறை கிடைத்த வாக்குகின் எண்ணிக்கையை வைத்து, இந்த முறை கிட்டத்தட்ட ஒரு கோடிக்கு மேல் வாக்குகள் கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக தேர்தல் பிரச்சாரம் போது மேடையில் தெரிவித்தார் சீமான்.

திமுக அதிமுகவிற்கு அடுத்தபடியாக 6.85% வாக்குகளைப் பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவாகி உள்ளது நாம் தமிழர் கட்சி என்பதை நாம் மறுக்க முடியாது ஒன்று தான்.

seeman
seeman

ஓட்டுக்கு பணம் தரவில்லை, 50 சதவீதப் பெண்களை களத்தில் இறக்கியது, எந்த கட்சியுடன் கூட்டணி இல்லாமல் 234 தொகுதியிலும் தனித்து நின்றது இதெல்லாம் தான் சீமானின் ஆளுமை திறனை மக்களுக்கு வெளிப்படுத்தியதாக பார்க்கப்படுகிறது.

1. DMK+- 210 Lakhs (45.08%) (13 party)
2. ADMK+- 176 Lakhs (37.67%) (10 party)
3. NTK – 29.61 Lakhs (6.85%) Single
4. MNM+ – 11.80 Lakhs (2.53%)
5. AMK+ – 13.11 Lakhs (2.81%)

இதைத் தவிர மேடையில் பேசும்போது அடித்தட்டு மக்கள் வரை அரசியலை தெரிந்து கொள்ளும் அளவிற்கு புரிய வைத்து விடுவார் சீமான். தமிழகத்தில் இந்த முறை தோற்றாலும் இன்னும் சில வருடங்களில் கண்டிப்பாக ஆட்சியை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.