தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாக உள்ள 12 பார்ட்-2 படங்களின் லிஸ்ட்.. இதில் உங்க ஃபேவரைட் என்ன?

தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்க பலரும் ஆசைப்பட்டு செலவு செய்து எடுத்து வருகின்றனர். ஆனால் அதில் சொற்ப படங்களைத் தவிர மற்ற அனைத்து படங்களுமே தோல்வியைத் தழுவியது.

இருந்தாலும் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்கள் முதல் சின்ன நடிகர்களின் படங்கள் வரை மொத்தம் கிட்டத்தட்ட 12 படங்களின் இரண்டாம் பாகம் வெளிவர உள்ளது. அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வடசென்னை 2, ஏற்கனவே உருவாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் கே ஜி எஃப் 2, விஷால் மிஸ்கின் கூட்டணியில் உருவாகும் துப்பறிவாளன் 2, லோகேஷ் கனகராஜ், கார்த்தி கூட்டணியில் வரவிருக்கும் படம் கைதி 2.

மேலும் தனுஷ் செல்வராகவனின் புதுப்பேட்டை 2, கமல் ஷங்கரின் இந்தியன் 2, விஷ்ணு விஷாலின் இன்று நேற்று நாளை 2, மாயவன் 2, விஷ்ணு விஷாலின் ராட்சசன் 2, விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2.

இவற்றைத் தொடர்ந்து சதுரங்க வேட்டை 2, சந்திரமுகி 2, ஆயிரத்தில் ஒருவன் 2 போன்ற படங்களும் உருவாக உள்ளது. இதில் பல படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்னதான் வெற்றி பெற்ற படத்தின் இரண்டாம் பாகங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தோல்வியை தழுவினாலும் இந்த 12 படங்களுக்குமே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகின்றன என்பதும் மறுக்க முடியாத ஒன்று.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்