தனுஷ் செய்வது கொஞ்சம் கூட சரியில்ல.. எச்சரிக்கும் தமிழ் சினிமா

இந்திய சினிமாவில் பிரபல நடிகராக மாறியுள்ள தனுஷ் தற்போது கைவசம் பல படங்கள் வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து மேலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். இங்குதான் சின்ன குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தனுஷ் தற்போது தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய பிரபலமாகி விட்டதால் அவரை வைத்து படம் தயாரிக்க பலமொழி நிறுவனங்களும் ரெடியாக இருக்கின்றன. அதில் தெலுங்கு சினிமா தனுஷை வைத்து ஒரே நேரத்தில் 2 படங்களை தயாரிக்கவுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகும் இந்த படங்களுக்காக தனுஷ் பெரிய அளவு சம்பளம் பேசியுள்ளாராம். அதுமட்டுமில்லாமல் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த த கிரே மேன் படம் வெளியானால் ஹாலிவுட்டிலும் பிஸியாகி விடுவாராம்.

இந்நிலையில் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட தமிழ் படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு தொடர்ந்து மற்ற மொழி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருவது கொஞ்சம் கூட சரியில்லை என தனுஷ் மீது தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

தனுஷ் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் D43 படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் அண்ணன் இயக்கும் நானே வருவேன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். தொடர்ந்து சில தமிழ் படங்களிலும் நடிக்க உள்ளாராம்.

மேலும் தனுஷ் நடிக்கும் தெலுங்கு படங்கள் அனைத்துமே 2022 ஆம் ஆண்டுதான் தொடங்கப் போகிறது என கூறியுள்ளனர். புரியாமல் பிரச்சனை செய்ய வேண்டாம் எனவும் தனுஷ் வட்டாரங்களிலிருந்து தமிழ் தயாரிப்பாளர்களுக்கு செய்திகள் சென்றுள்ளன.

dhanush-cinemapettai
dhanush-cinemapettai
- Advertisement -