அஜித் மீது கோபத்தில் தமிழ் தயாரிப்பாளர்கள்.. தல இப்படி ஏமாத்துவார்ன்னு எதிர்பார்க்கலயாம்!

என்னதான் அஜித் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகராக வலம் வந்தாலும் அவர்மீது பல தமிழ் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து விமர்சனங்கள் வைத்து வருவதை பார்க்க முடிகிறது. ஆனால் அஜித் இதையெல்லாம் கண்டு கொள்வதாக தெரியவில்லை.

ஒவ்வொரு சினிமா உலகமும் தன்னுடைய மொழி சினிமா உலக அளவில் பேசப்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நடித்து வருகின்றனர். சம்பாதிப்பது ஒருபக்கம் இருந்தாலும் அவர்களது படம் உலக அளவில் வரவேற்பைப் பெற்றால் பெருமை அந்த மொழி சினிமாவுக்கு தானே.

அப்படி இருக்கையில் தல அஜித் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார் என்ற கேள்விகள் தொடர்ந்து கோலிவுட் வட்டாரங்களை துளைத்து எடுத்துக் கொண்டிருக்கின்றன. அதாவது தல அஜித் எப்போதுமே தமிழ் தயாரிப்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தான்.

அஜித்துக்கு ஒரு தயாரிப்பாளரையோ அல்லது இயக்குனரையோ பிடித்துவிட்டால் தொடர்ந்து அவர்களுடன் பணியாற்றுவதில் ஆர்வம் காட்டுவார். அந்த வகையில் தற்போது பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

ajith-boneykapoor-cinemapettai
ajith-boneykapoor-cinemapettai

இதனால் அஜித் தமிழ் தயாரிப்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் தொடர்ந்து வடமாநில தயாரிப்பாளருக்கு வாய்ப்பு கொடுக்கிறார் என்ற ஆதங்கம் இருந்து கொண்டே இருக்கிறதாம். ஆனால் அஜித் இதற்கு முன்னர் தொடர்ந்து ஏஎம் ரத்னம் மற்றும் சத்யஜோதி பிலிம்ஸ் ஆகிய இருவருக்கும் தொடர்ந்து சில படங்களில் நடித்துக் கொடுத்துள்ளார் என்பதையும் மறந்து விடக்கூடாது.

அஜித் மொத்தமும் நமக்குத்தான் செய்ய வேண்டும் என்ற தமிழ் தயாரிப்பாளர்களின் எதிர்பார்த்துதான் அவர்மீது வேண்டுமென்றே ஒரு வன்மத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என அஜித் வட்டாரங்களில் செய்திகள் உலா வருகின்றன. போதாக்குறைக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல மூன்றாவது முறையாக அஜித் மற்றும் போனிகபூர் கூட்டணி இணைய உள்ளதாகவும் தெரிகிறது.

அஜித் தமிழ் தயாரிப்பாளர்களின் மீது வருத்தத்தில் இருக்க காரணம் வெற்றி கொடுக்கும்போது ஓட்டிக் கொள்வதும், தோல்வி கொடுக்கும்போது அஜித்தை விமர்சனம் செய்வதும் அவருக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்