மது விற்பனை நேரத்தை மாற்றிய தமிழக அரசு.. ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பா, கொந்தளிக்கும் மக்கள்!

தமிழ்நாட்டில் அரசாங்கத்திற்கு வரக்கூடிய மிக பெரிய வருமானம் டாஸ்மாக். அதனால் எந்த கட்சி வந்தாலும் எந்த கடைக்கு வேணாலும் பூட்டு போடுவார்கள், ஆனால் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடவே மாட்டார்கள்.

அதற்கு காரணம் அதில் வரும் அளவு கடந்த வருமானம் தான். கடந்த ஆண்டில் எதிர்க்கட்சியாக இருந்த திமுக தற்போது ஆளும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

எதிர்க்கட்சியாக இருக்கும் போது இவர்கள் மதுவிலக்கை பற்றி அவ்வளவு தூரம் பேசிவிட்டு, தற்போது இவர்கள் ஆட்சியில் மதுவிலக்கு பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது தான் வேடிக்கை.

அதிலும் குறிப்பாக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மதுவிலக்கு கோரி வீட்டின் முன்பு போராட்டம் நடத்தியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

தற்போது கொரோனா தொற்று பரவி வருவதால் அரசாங்கம் பல கடைகளுக்கும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதே போல் டாஸ்மாக் இன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என தெரிவித்துள்ளது.

tasmac-annur
tasmac-annur

இதனால் மது பிரியர்கள் கொஞ்சமும் யோசிக்காமல் 7 மணிக்கு முன்பே கடைக்கு போய் நின்று விடுகிறார்கள். இதனைப் பார்க்கும் போது பலருக்கும் வேதனை தருவது மட்டுமில்லாமல் இதனாலேயே கொரோனா பரவல் அதிகரிக்க காரணமாக இருக்கும் எனவும் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்