தமிழக முதல்வரால் சிங்க நடை போடும் தமிழகம்.. அடுக்கடுக்கான நலத்திட்டங்கள்!

தமிழகத்தில் அதிமுக கட்சியின் சார்பில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் முதல்வராக சிறப்பாக செயலாற்றி வருகிறார். இவரது நலத் திட்டங்களால் தற்போது தமிழகம் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக மாறியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் வருகின்ற மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், ‘வெற்றி நடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், இதுவரை தமிழக அரசு, மக்களுக்காக என்னென்ன நலத்திட்டங்களை செய்துள்ளது என்பது பற்றிய விபரம் வெளியாகி, வைரலாகி வருகிறது.

மேலும் முதல்வரால் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களில் லிஸ்ட் இதோ:

  • 52.31 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா இலவச மடிக்கணினி
  • இந்தியாவிலேயே தலைசிறந்த காவல்துறை
  • தாலிக்கு தங்கம் திட்டத்தின்  மூலம் 12.5 லட்சம் பயனாளிகள்
  • மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு
  • அம்மா ஸ்கூட்டர் திட்டத்தின் மூலம் 2.8 லட்சம் பயனாளிகள்
  • 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் பயனடைந்த 90.73 லட்சம்  பயனாளிகள்.
  • அம்மா உணவகங்களின் மூலம் ஏழை எளியோருக்கு பசியாற்றல்
  • பிளாஸ்டிக் இல்லா தமிழகம்
  • பாலூட்டும் தாய்மார்களின் நலனில் அக்கறை
  • 67.09 லட்ச கர்ப்பிணிகளுக்கு ரூபாய் 18 ஆயிரம் நிதி உதவி
  • சுய உதவி குழுக்கள் மூலம் 26,02,433 மகளிருக்கு ரூபாய் 79,69,940 கோடி கடனுதவி
  • தமிழகத்திலுள்ள மூத்த குடிமகன்களுக்கு மாதம் ரூபாய் 1000 ஓய்வூதியமாக வழங்குவது. இதன்மூலம் 33.07 லட்ச மூத்த குடிமகன்கள் பயனடைந்துள்ளனர்.
  • உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு
  • பேரிடர் காலத்திலும் தொழில் முதலீட்டில் தமிழகம் முதல் இடம்
  • தொடர்ந்து 3 ஆண்டுகளாக இந்தியா டுடே ஆய்வில் சிறந்த மாநிலமாக தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது
  • ஆளுமையில் தமிழகம் முதலிடம்
  • 17 லட்சம் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி
  • விவசாயத்தில் 30 ஆண்டுகளில் இல்லாத  மகசூல்
  • ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா கொண்ட மாநிலம் தமிழகம்
  • நெசவாளர்களுக்கு கட்டணம் இல்லா மின்சாரம் வழங்குதல்
  • குடிமராமத்து திட்டம் மூலம் 5,586 நீர்நிலைகள் மீட்கப்பட்டுள்ளன
  • நீர் மேலாண்மையில் தமிழகம் முதலிடம்
  • டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளாக அறிவிப்பு
  • 50 வருடமாக நடைபெற்று வந்த காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு
  • தானிய உற்பத்தியில் ஐந்து முறை மத்திய அரசின் விருதை பெற்ற தமிழகம்

எனவே, இவ்வாறு பல நலத் திட்டங்களை செயல்படுத்தி, தமிழகத்தை இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களில், தலை சிறந்த மாநிலமாக மாற்றிக்காட்டிய முதல்வரின் சாதனைகளைப் பற்றிய விபரம் இணையத்தில் வெளியாகி, பெருமளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

edappadi
edappadi

Next Story

- Advertisement -