பொய்யான வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றும் எதிர்க்கட்சி.. கடும் எச்சரிக்கை விடும் தமிழக முதல்வர்!

வரும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தனது சூறாவளி சுற்றுப்பயணத்தின்போது, எதிர்க்கட்சியை கடுமையாக எச்சரித்து வருகிறார்.

ஏனென்றால் எதிர்க்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்ற நினைக்கிறார்.

ஆகையால் திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்? என்ற கேள்வியை தமிழக முதல்வர் எழுப்பி வருகிறார்.

eps-cinemapettai

அதுமட்டுமில்லாமல் எக்கு மதில் சுவர் ஆன அதிமுகவிடம் மோதினால், திமுக மண்டை உடையும்.

அதேபோல் அதிமுகவின் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் தமிழகத்தில் நடமாடுவது கடினம் என்றும் தமிழக முதல்வர் திமுகவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்