ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

தமிழ் சினிமாவில் புதிய டெக்னாலஜியில் கலக்கிய 7 படங்கள்.. அப்பவே கிங் என நிருபித்த கமல்

வணக்கம் சினிமாப்பேட்டை வாசகர்களே! நமது சினிமாபேட்டை வலைத்தளம் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளை உங்களுக்கு வாரித்தருகிறது. அந்த வகையில், தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்பட்ட கேட்ஜெட் அல்லது டெக்னாலஜி திரைப்படங்களை தற்போது காணலாம்.

விக்ரம்: பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கும் புதிய விக்ரம் இல்லை. 1986 ஆம் ஆண்டு கமல்ஹாசன், அம்பிகா, சத்யராஜ் உட்பட பலர் நடித்திருந்த திரைப்படம் விக்ரம். கிட்டத்தட்ட இந்தியன் ஜேம்ஸ் பாண்ட் மாதிரிபடம் தான் இது. இந்த படத்தில் இந்திய ராக்கெட் ஒன்றை வில்லனான சத்யராஜ் கடத்திக்கொண்டு போய், மூன்று கொடுங்குற்றவாளிகளை விடுதலை செய்ய சொல்லி நிர்பந்திப்பார். அதனை முறியடிக்கவும், ராக்கெட்டை மீட்டு வரவும் முன்னாள் ஏஜென்ட் கமலை வரவழைப்பார்கள். இந்த படத்தில் தான் எனக்கு தெரிந்த வரை சாமானிய மக்களுக்கு புரியும் வகையில் ராக்கெட் பற்றி கூறி இருந்தார்கள். இந்த படத்திற்கு திரைக்கதை, சுஜாதா என்பது கூடுதல் தகவல்.

எந்திரன்: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்த திரைப்படம் எந்திரன். இந்த படத்திற்கு பிரம்மாண்ட இசை கொடுத்திருந்தார் ஏ.ஆர். ரஹ்மான். இந்த படம் முழுக்க முழுக்க டேகினாலஜி தான். விஞ்ஞானி ரஜினிகாந்த், சிட்டி என்ற ரோபோவை உருவாக்குகிறார். சிட்டி ஒரு கட்டத்திற்கு மேல் எதிரிகளால், தவறாக சிந்திக்கும் திறன் பெற்று, கதாநாயகியை அடைய பார்க்கிறது. பின்னர் கதை என்னவானது என்பதை படம் விளக்குகிறது. ரோபோடிக்ஸ் பற்றி அதிகம் இந்த படத்தில் எளிய வகையில் கூறப்பட்டிருக்கும். இந்த படத்திற்கும் கதாசிரியர் சுஜாதா.

இன்று நேற்று நாளை: ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ் ஜோடியாக நடித்த திரைப்படமான இதில் காலப்பயணம் காட்டப்படுகிறது. கால யந்திரத்தை அடையும் நாயகன், காலத்தை கடந்து பயணிக்கிறார். அவர் காண முடியாத ஆச்சரியங்களை எல்லாம் காண்கிறார். அதனை ரசிகர்களுக்கும் கடத்துவதில் வெற்றி பெறுகிறார் இயக்குனர். அனேகமாக தமிழ் சினிமாவின் முதல் காலப்பயண திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும். நிச்சயம் பார்க்கவேண்டிய ஒரு முயற்சி

இரும்புத்திரை: விஷால், அர்ஜுன் நடித்திருந்த இந்த நவீன டெக்நாலஜி திருட்டு படத்தாய் மித்ரன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் வசனங்கள் பெரிதாக பேசப்பட்டன. இன்றைய திருடனுக்கு உன் வீட்டு சாவி தேவை இல்லை என்பது போன்ற வாசகங்கள் பெரிய வரவேற்பை பெற்றன. நவீன இணையத்தை பயன்படுத்தி எப்படி நமது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படுகிறது என்பதை சிறப்பாக கூறி இருந்தனர்.

டிக் டிக் டிக்: இயக்குனர் ஷக்தி சௌந்தரராஜன் வித்தியாசமான படங்களை இயக்குவதில் வல்லவர். அந்த வகையில் தமிழில் முதன்முதல் விண்வெளி பயண திரைப்படமான டிக் டிக் டிக் படத்தை கொடுத்தார். ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்த இந்த படத்தில் அவர்கள் விண்வெளி வீரர்களாக வருகிறார்கள். தமிழ் நல்லதொரு முயற்சியாக இந்த படம் அமைந்தது. மற்றபடி கொஞ்சம் அதிகமாகவே காதில் பூ சுற்றினார்கள், தமிழ் படம் என்பதால்.

24: இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் கலக்கி இருந்த திரைப்படம் 24. அவருக்கு ஜோடியாக சமந்தா, நித்தியா மேனன். கதைப்படி வாட்ச் மெக்கானிக்காக சூர்யா தனது தந்தையின் கண்டுபிடிப்பான காலத்தை கடக்கும் கைக்கடிகாரத்தை கண்டுபிடித்து அதனை சரி செய்கிறார். அதன் மூலம் காலத்தை அவரால் நிறுத்தி வைக்க முடிகிறது. இதனால் அவருக்கு வரும் ஆபத்துகள் என்ன? தனது காதலியை கரம் பிடித்தாரா? அவரது பெற்றோர்களுக்கு என்ன ஆனது போன்ற கேள்விகளுக்கு விடை கொடுக்கிறது மீதிப்படம். நிச்சயம் பார்க்கவேண்டிய திரைப்படம்.

அனேகன்: புதுமை இயக்குனர் மறைந்த கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமைரா, கார்த்திக் உட்பட பலர் நடித்திருந்த இந்த படத்தில் நமது நவரச நாயகனுக்கு வில்லன் வேடம். கதைப்படி மக்களை அடிமையாக்கும் மொபைல் போன் விளையாட்டை உருவாக்குவதற்காக நாயகிக்கும் போதைப்பொருள் தரப்படுகிறது. அதனால் ஏற்படும் விபரீத எண்ணங்களால் பழைய நினைவுகள்/ஜென்மங்களுக்கு செல்ல, அதனால் கார்த்திக்கின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வருகிறது. நிச்சயம் பார்க்கவேண்டிய படம். பாடல்கள் எல்லாம் அருமையாக கொடுத்திருந்தார் ஹாரிஸ் ஜெயராஜ்.

- Advertisement -

Trending News