தமிழ் சினிமாவின் 7 சூப்பர் ஹிட் படங்களை கெடுத்த இயக்குனர்கள்.. கேவலப்படுத்தி ஒஸ்ட் ரீமேக் செய்த நடிகர்கள்

வணக்கம் சினிமாபேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த கட்டுரையில் தமிழ் சினிமாவில் ஹிட்டான தமிழ் படங்களை ஹிந்தியில் எடுக்கிறேன் பேர்வழி என்று கெடுத்து குட்டி சுவர் ஆக்கிய 7 திரைப்படங்களை பார்க்கலாம்.

பம்மல் கே சம்பந்தம் – கம்பக்த் இஷ்க்: கமல்ஹாசன் நடிப்பில், சிம்ரன், மணிவண்ணன், கல்பனா, சுகுமாரி, அப்பாஸ், வையாபுரி மற்றும் பலர் நடித்திருந்த இந்த படத்தை மௌலி இயக்கி இருந்தார், கிரேசி மோகன் வசங்களால் நம்மை சிரிக்கவைத்தார். நல்லதொரு வெற்றியை பதிவு செய்த இந்த படத்தை, ஹிந்தியில் கம்பக்த் இஷ்க் என்னும் பெயரில் கடித்து குதறி எடுத்தனர். படம் 10 நாள் கூட தேறவில்லை. படத்தின் முக்கியமான காமெடியை மொக்கை செய்துவிட்டு, ஹீரோயிசம் அதிகமாக எடுத்திருந்தனர். இந்த படத்தில் அக்சய் குமார், கரீனா கபூர் நடித்திருந்தனர்.

ரன் – ரன்: தமிழில் மாதவன், மீரா ஜாஸ்மின், அதுல் குல்கர்னி நடிப்பில் சக்கை போடு போட்ட இந்த படத்தை லிங்குசாமி இயக்கி இருந்தார். சாக்லேட் பாய் என்ற அடையாளத்தோடு இருந்த மாதவனை இந்த படத்தில் ரொமான்டிக் ஆக்ஷ்ன் ஹீரோவாக காட்டியிருந்தார். படம் மாபெரும் ஹிட். வித்யாசாகர் இசையில் அணைத்து பாடல்களும் ஹிட். இந்த படத்தை இதே பெயரில் அபிஷேக் பச்சன், பூமிகாவை வைத்து ஹிந்தியில் எடுத்திருந்தனர். படம் அட்டர் பிளாப். எப்படி பார்த்தாலும் அபிஷேக் பச்சன்னை காலேஜ் மாணவரா நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை

காக்க காக்க – போர்ஸ்: கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா நடித்திருந்த இந்த படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். போலீஸ் கதையான இந்த படத்தில் வில்லன் வேடம் ஏற்றிருந்தார் ஜீவன். மாபெரும் ஹிட்டான இந்த படத்தை ஜான் ஆப்ரஹாமை வைத்து போர்ஸ் என்னும் பெயரில் எடுத்திருந்தனர். துப்பாக்கி வில்லன் வித்யுத் ஜம்வால் இந்த படத்தில் வில்லன் வேடம் ஏற்றிருந்தார். கொஞ்சம் கூட தமிழ் படத்தின் விறுவிறுப்பு இல்லாமல் எடுத்திருந்த காரணத்தால் சுமாரான வெற்றியை பதிவு செய்தது இந்த படம்.

ஒகே கண்மணி – ஓகே ஜானு: தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யாமேனன் நடித்திருந்த ஓகே கண்மணி படத்திற்கு ரஹ்மான் இசை அமைத்திருந்தார். மாபெரும் வெற்றி என்று சொல்ல முடியாவிட்டாலும் நல்லதொரு வெற்றியை பதிவு செய்தது இந்த படம். இந்த படத்தை ஹிந்தியில் ஒகே ஜானு என்னும் பெயரில் ஆதித்யராய் கபூர், ஷ்ரத்தா கபூர் நடிக்க எடுத்திருந்தனர். தமிழில் இருந்த ஒரு எதார்த்தம் மிஸ்ஸிங். கொஞ்சம் கூட ஹிந்தி ஆடியன்ஸ் கூட கன்னெக்ட் ஆகவே இல்லை.

காஞ்சனா – லட்சுமி: தமிழில் லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா திரைப்படத்தில் அவருடன் சரத்குமார், லட்சுமி ராய், கோவை சரளா உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த படம் மாபெரும் ஹிட்டாக அமைந்தது. இந்த படத்தின் சிறப்பு கதாபாத்திரம் திருநங்கையாக வந்த சரத்குமாருடையது. இந்த படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து லட்சுமி என்னும் பெயரில் எடுத்திருந்தனர். படத்தை கொஞ்சமும் ஹிந்தி ஆடியன்ஸுக்கு மாத்தாம, அப்படியே எடுத்தா எப்படிய்யா ஓடும்?

ஜிகர்தண்டா – பச்சன் பாண்டே: அக்ஷய் குமாருக்கு தமிழ் படங்கள் மேல என்ன காண்டோ தெரியவில்லை எப்போது பார்த்தாலும் நல்ல தமிழ் படங்களை ஹிந்தியில் ரிமேக் செய்து வாங்கிக்கட்டிக்கொள்வார் அல்லது மொக்கையாக நடித்து வைப்பார். அப்படி சமீபத்தில் ஜிகர்தண்டா படத்தை ஹிந்தியில் எடுத்து அவர் பெயரை அவரே கெடுத்துக்கொண்டார். இந்த படத்திற்கும் ஒரிஜினலுக்கும் ஆயிரம் வித்தியாசம் சொல்லலாம். அந்த அளவுக்கு ஒரிஜினலை கேவலப்படுத்தி எடுத்து இருந்தனர்.

பிஸ்சா: தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்குனராக அறிமுகமான படம் பிஸ்சா. இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் விஜய் சேதுபதி, ரெம்யா நம்பீசன் உட்பட பலர் நடித்திருந்தனர். அமானுஷியத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தை ஹிந்தியில் அதே பெயரில் எடுத்தனர். ஒரிஜினலில் இருந்த மாஜிக் இந்த படத்தில் மிஸ்ஸிங்க. அக்ஷய் ஓபராய், பார்வதி ஓமனக்குட்டன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருந்தனர்.