இந்த வருடம் ஹிந்தியில் ரீமேக்காகும் 8 படங்கள்.. இந்தியளவில் கவனம் ஈர்த்த நம்ம ஊரு ஹீரோக்கள்

பிற மொழிப் படங்களில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற திரைப்படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. அவ்வாறு ரீமேக் செய்யப்படும் படங்கள் அதே சாயல் இல்லாமல் சற்று வித்யாசமாக எடுத்தால் அந்த படங்கள் ரசிகர்களை கவருகிறது. தென்னிந்திய திரைப்படங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்று வரும் நிலையில் இதில் சில படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

விக்ரம் வேதா: நேர்மையான போலீஸ் ஆக விக்ரம் கதாபாத்திரத்தில் மாதவனும், ரவுடி கும்பலின் தலைவனாக வேதா கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் என இரண்டு மாசான ஹீரோக்களை வைத்து ஹிட்டடித்த படம் விக்ரம் வேதா. இப்படத்தை இயக்கிய புஷ்பா, காயத்ரி இதே பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளார்கள். ஹிந்தியில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிரித்திக் ரோஷனும், மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகானும் நடிக்கிறார்கள்.

சூரரை போற்று: சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரை போற்று. ஏர் டெக்கான் விமான நிறுவனத்தை துவங்கிய கோபிநாத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது சூரரை போற்று. அமேசான் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியானாலும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றது. இப்படத்தை சுதா கொங்கரா ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளார். இப்படத்தில் சூர்யாவின் கதாபாத்திரத்தில் யார் நடிப்பது என்ற பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

அருவி: அதிதி பாலன் நடிப்பில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் அருவி. இப்படத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட கதாநாயகி சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அருவி படத்தை அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியிருந்தார். இந்தியில் இப்படத்தை ஈ நிவாஸ் இயக்க உள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஃபாத்திமா சானா ஷாயிக் நடிக்க உள்ளார்.

ஹெலன்: மலையாளத்தில் வெளியான ஹெலன் என்ற திரைப்படத்தில் அன்னா பென், லால் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் தமிழிலும் அன்பிற்கினியாள் என்று ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தில் பகுதி நேரமாக உணவகத்தில் வேலை பார்க்கும் பெண் உணவுகளை பதப்படுத்தப்படும் பிரிட்ஜ் அறையில் மாட்டி கொள்கிறார். அதிலிருந்து அவர் எப்படி வெளியே வருகிறார் என்பதே படத்தின் கதை.கபூர இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை போனி கபூர் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

கைதி: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் கைதி. ஒரே இரவில் நடக்கும் கதையாக இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் கார்த்தி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

மாஸ்டர்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சல்மான் கான் மற்றும் ஷாகித் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

யு டர்ன்: தெலுங்கில், பாலகுமாரன் இயக்கத்தில் சமந்தாவின் வித்தியாசமான நடிப்பில் வெளியான திரைப்படம் யு டர்ன். இப்படத்தில் சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டு இருந்தது. படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஆல்யா எஃப் நடிக்கிறார். ஏக்தா கபூர் புரோடக்சன் யு டர்ன் ஹிந்தி ரீமேக்கை தயாரிக்கிறது.

ஹிட்: தெலுங்கில் விஸ்வாக் சென் மற்றும் ருஹானி சர்மா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த படம் ஹிட். காணாமல் போன பெண்ணே தேடிக் கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியின் கதையைத் திரில்லராக எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ராஜ்குமார் ராவ் கதாநாயகனாகவும், சானியா மல்ஹோத்ரா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்