திறமை இருந்தும் சாதிக்க முடியாமல் போன 7 நடிகர்கள்.. 1500 படங்கள் நடித்த பிரபலத்திற்குகே இதே நிலைமை தான்

இவ்வுலகில் திறமை இல்லாத மனிதர்களே இருக்க முடியாது . ஆனால் திறமையை விட நேரம் ரொம்ப முக்கியம் என்பதை பலரும் கூறியுள்ளனர். அந்த மாதிரி சினிமாவில் திறமையிருந்தும் சாதிக்க முடியாமல் போன நடிகர்களை பற்றி பார்ப்போம் .

ஓமக்குச்சி நரசிம்மன்: ஓமக்குச்சி நரசிம்மன் என்றாலே தெரியாத ரசிகர்கள் இருக்க முடியாது. அந்த அளவிற்கு ரசிகர்களிடம் பிரபலமானவர். 14 மொழிகளில் 1500 படங்கள் மற்றும் ஒரு ஆங்கில படத்தில் நடித்துள்ளார். ஆனால் இவ்வளவு படம் நடித்தும் இவரால் சினிமாவில்  தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் கடைசிவரை ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பளம் வாங்கிய காலத்தை கழித்துள்ளார்.

Omakuchi Narasimhan
Omakuchi Narasimhan

எல் ஐ சி நரசிம்மன்: எல்ஐசி நரசிம்மன் எல்ஐசி வேலை பார்த்துள்ளார். ஆனால் சினிமாவில் மேல் ஆர்வம் இருந்ததால் வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்துள்ளார். அதனால் தான் இவரை எல்ஐசி நரசிம்மன் என அழைத்து வந்துள்ளனர்.

lic narasimhan
lic narasimhan

இயக்குனர்கள் பலருக்கும் போலீஸ் ஆபீஸர், அட்வகேட் மற்றும் நீதிபதி ஆகிய கதாபாத்திரங்கள் எடுக்க வேண்டுமென்றால் எல்ஐசி நரசிம்மனை வைத்துதான் எடுப்பார்கள். ரசிகர்களிடம் பிரபலமடைந்த எல்ஐசி நரசிம்மன் சினிமாவில் மற்ற காமெடி நடிகர்கள் போல் பெரிய அளவில்தனக்கான இடம் பிடிக்காமல் போனார்.

போண்டாமணி: போண்டாமணி ஒவ்வொரு நாளும் இரண்டு போண்டா சாப்பிடுவார். அதனால தான் இவருக்கு போண்டாமணி என அழைத்துள்ளனர். கிட்டத்தட்ட 150 படங்களில் நடித்திருக்கிறார். வடிவேலு இவருடைய வளர்ச்சிக்கு பெரிதாக உதவியிருந்தாலும் ரசிகர்களிடம் பெரிய காமெடியனாக வர முடியாமல் சினிமாவில் தனக்கான இடம் கிடைக்கவில்லை.

bonda mani
bonda mani

பாவா லட்சுமணன்: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடம் ஒரே ஒரு வசனத்தின் மூலம் மனோகர் பிரபலமடைந்தவர் பாவா லட்சுமணன். அதாவது மாயி படத்தில் “வாம்மா மின்னல்” எனக் கூறுவார். இந்த வசனத்தின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்தார். வடிவேலு இவரது வளர்ச்சிக்கு பெரிதும் உதவினார். ஆனால் காமெடியனாக சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடிக்காமல் போனார்.

அல்வா வாசு: சத்யராஜுக்கு வில்லனாக பெயர் வாங்கிக்கொடுத்த திரைப்படம் அமைதிப்படை. இப்படத்தில் சத்யராஜ்விற்காக அல்வா வாங்கி கொடுப்பார். இதன் மூலம் இவருக்கு அல்வா வாசு என பெயர் கிடைத்தது.

Halwa vasu
Halwa vasu

இவரும் ரசிகர்களிடம் ஓரளவுக்கு பிரபலமாகி இருந்தாலும் சினிமாவில் தனக்கான இடம் கிடைக்காமல் போனார்.

ஜப்பான் குமார்: தமிழ் சினிமா டான்ஸ் மாஸ்டர் மற்றும் காமெடி போன்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜப்பான் குமார். இவர் ஜில்லா படத்தில் கூட விஜய்யின் வீட்டிற்கு வேலை செய்பவராக நடித்திருப்பார். இவர் பல பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ளார். இன்று வரை தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்காமல் போனார்.

வெங்கல் ராவ்: ஃபைட் மாஸ்டராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பின்பு கை மற்றும் கால் போன்ற இடத்தில் சிறு சிறு காயங்களால் சண்டைக்காட்சியில் நடிக்க முடியாமல் போனது அதன் பிறகுதான் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வந்தார். எங்களது வளர்ச்சிக்கு மிகவும் உதவியவர் வடிவேல் இதை அவரே பலமுறை கூறியுள்ளார். ரசிகர்களிடம் பிரபலமாக இருந்தாலும் இவருக்கு என்று சினிமாவில் இடம் கிடைக்காமல் போனது.

vengal rao-cinemapettai
vengal rao-cinemapettai

கிரேன் மனோகர்: முத்து, வின்னர் மற்றும் சாமி போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் கிரேன் மனோகர். சினிமாவில் ஒரு சில காட்சிகள் நடித்திருந்தாலும் ரசிகர்களுக்கு தெரியக்கூடிய நடிகராக பிரபலமானார். ஆனால் சினிமாவில் சாதிக்க முடியாமல் ஒரு சில கதாபாத்திரங்கள் மட்டுமே நடித்து வருகிறார்.

crane manohar
crane manohar
- Advertisement -spot_img

Trending News