குறைந்த செலவு.. பல மடங்கு வசூல் வேட்டையாடிய 7 ஹிட் படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படம் அதிக பொருட்செலவில், அதிக விளம்பரங்கள் செய்து வெளியிடப்படுகிறது. ஆனால் குறைந்த பொருட்செலவில் உருவாகி அதிக வசூலை தந்த படமும் உண்டு. தமிழ் சினிமாவில் சிறு பட்ஜெட் படமாக உருவாகி ரசிகர்களை கவர்ந்து பிளாக்பஸ்டர் வெற்றி தந்த படங்களில் பார்க்கலாம்.

எல் கே ஜி: பிரபு இயக்கத்தில் ஆர் கே பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் எல் கே ஜி. இப்படம் அரசியல் சார்ந்த நகைச்சுவை படமாக எடுக்கப்பட்டது. தேர்தலில் ஜெயிக்க ஆர்ஜே பாலாஜி என்னென்ன செய்கிறார் என்றும் இறுதியில் ராமராஜ் பாண்டியனை ஜெயித்தாரா இல்லை தோற்றாரா என்பதே எல் கே ஜி படத்தின் கதை. இப்படம் 3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பாக்ஸ் ஆபீஸில் 15 கோடி வசூல் செய்தது.

இரும்புத்திரை: விஷால் பிலிம் பேக்டரி சார்பில் மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன், ரோபோ ஷங்கர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் இரும்புத்திரை. இப்படம் ஹாக்கிங், சைபர் திருட்டு இவற்றை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இருந்தது. இப்படத்தின் பட்ஜெட் 14.5 கோடியில் எடுக்கப்பட்டிருந்தது. உலக அளவில் இரும்புத்திரை 105 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்தது.

கோலமாவு கோகிலா: லைகா புரோடக்சன் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா, சரண்யா பொன்வண்ணன், ஜாக்லின், யோகி பாபு நடிப்பில் வெளியான திரைப்படம் கோலமாவு கோகிலா. அம்மா, அப்பா, தங்கைகாக நயன்தாரா குடும்பமாக சேர்ந்து போதை பொருள் கடத்தும் கதைக் களத்தை நகைச்சுவையாய் எடுத்திருந்தார் இயக்குனர். கோலமாவு கோகிலா படம் 8 கோடி பட்ஜெட்டில் எடுத்து முடிக்கப்பட்டது. ஆனால் இப்படம் 73 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது.

96 : பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் 96. இப்படத்தில் கோவிந்த் மேனன் உருவாக்கிய பாடல்கள் அனைத்துமே ஹிட்டானது. பள்ளிப்பருவத்தில் காதலித்து பிரிந்த இருவரும் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்கும்போது இருக்கும் உணர்வுபூர்வமான நிகழ்வாக இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. 96 படம் 18 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இப்படம் உலக அளவில் 55 கோடி வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

தீரன்: வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத்தி சிங் நடிப்பில் வெளியான திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று. கார்த்தி இப்படத்தில் நேர்மையான, துடிப்பான போலிஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் ரசிகர் மத்தியில் பெரிய வெற்றி அடைந்தது. தீரன் படம் 36 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 97 கோடி வசூல் செய்தது.

ராட்சசன்: ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ராட்சசன். இப்படத்தில் பள்ளி மாணவிகளை குறிவைத்து கொடூரமாக கொலை செய்யும் சைக்கோவை தேடிப் பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக விஷ்ணு நடித்திருந்தார். இப்படம் 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பாக்ஸ் ஆபீஸில் 75 கோடி வசூல் செய்தது.

டிமான்ட்டி காலனி: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், அபிஷேக் ஜோசப் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் டிமான்ட்டி காலனி. இப்படம் சென்னையில் உள்ள ஒரு காலனியில் பல வருடங்களாக பேய் இருப்பதாக உள்ள நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு டிமான்ட்டி காலனி படம் எடுக்கப்பட்டது. இப்படம் 2 கோடி செலவில் எடுக்கப்பட்டு 25 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் இடம்பெற்றது.