70 லட்சம் மதிப்புள்ள கார் வாங்கிய கோ பட நடிகை.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் பொய் சொல்ல போறோம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். அதைத் தொடர்ந்து கோவா, கோ, ஏகன் போன்ற பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

அவர் பெயரை கூறினாலே நம் நினைவுக்கு வருவது அவருடைய சுருள் சுருளான நூடுல்ஸ் முடிதான். இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கிய கோ படத்தில் நடிகர் ஜீவாவை ஒரு தலையாக காதலிப்பது போல் அவர் நடித்து இருப்பார்.

அதில் அவருடைய துறுதுறுப்பான நடிப்பு இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது. அதன் பிறகு ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்த பியா தற்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் பியா தற்போது ஒரு போட்டோவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். அவர் புதிதாக வாங்கியிருக்கும் சுமார் 70 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ கார் தான் அது.

இந்த காரை வாங்கிய போது எடுத்த போட்டோவை தற்போது வெளியிட்டு இருக்கும் பியா இது என்னுடைய நெடுநாள் கனவு என்று தெரிவித்துள்ளார். தற்போது பிரபலங்கள் பலரும் பிஎம்டபிள்யூ காரை வைத்து இருப்பதை பெருமையாக கருதுகின்றனர்.

சமீபகாலமாக சின்னத்திரையில் இருக்கும் நடிகைகள் முதல் பெரிய திரையில் உள்ள நடிகைகள் வரை அனைவரும் பிஎம்டபிள்யூ காரை வாங்கி வருகின்றனர். தற்போது பியா வும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

piabajpai
piabajpai
Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்