Tamil Cinema News | சினிமா செய்திகள்
2021ல் வெளிவரும் டாப் ஹீரோக்களின் படங்களின் லிஸ்ட்.. வேட்டையாட காத்திருக்கும் தியேட்டர் முதலாளிகள்
கடந்த ஆண்டு பல தடங்கல்கள், சிக்கல்கள், பிரச்சினைகள் என அன்றாட வாழ்க்கையில் மட்டும் இல்லாமல் சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்டது என்று கூறலாம். பல பிரபலங்களின் படப்பிடிப்புகளும் கொரானா காரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது 2021 ஆம் ஆண்டு பல பிரபல நடிகர்களின் படங்கள் வெளிவர உள்ளன.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் அண்ணாத்த.

annaththe-cinemapettai
அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட ஒரு சிலருக்கு கொரானா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த படம் 2021 ஆம் ஆண்டு வெளியாகும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
விஜய் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் மாஸ்டர் இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மாஸ்டர் படம் வருகிற ஜனவரி 13ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதனால் 2021 ஆம் ஆண்டு வெளியாகும் படங்களில் இந்த படமும் இடம் பிடித்துள்ளது.

master-release-poster
மாஸ்டர் படத்திற்கு பிறகு கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன்னுடன் கைகோர்த்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் 2021 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

thalapathy-65-cinemapettai
நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அஜித்துடன் ஹச் வினோத்துடன் இணைந்து வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட வலிமை படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த படமும் 2021 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

valimai-cinemapettai
சூர்யா நடிப்பில் OTT தளத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு இவரது அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றே கூறலாம். தற்போது சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் எனும் படத்தை நடித்து வருகிறார். இப்படத்தினை எஸ் தாணு தயாரித்து வருகிறார்.

suriya-vadivasal-movie-story-leaked
அதன் பிறகு சூர்யா பசங்க படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் அனைத்தும் 2021 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து விக்ரம் எனும் பெயரில் புதிய படத்தை உருவாக்க உள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

vikram-cinemapettai
அதுமட்டுமில்லாமல் சங்கர் இயக்கத்திலும் இந்தியன் 2 படத்தில் கமல் நடித்து வருகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வால் கமலுக்கு ஜோடியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு திரைப்படங்களும் 2021 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

indian2-cinemapettai
கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன் நடிப்பில் உருவாகியுள்ள படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தின் டீஸர் 2018 ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு ஒரு சில காரணங்களால் படத்தை வெளியிட முடியாமல் படக்குழுவினர் தவித்து வந்தனர்.

dhuruvanatchatiram
மகாவீர்கர்ணா, கோபுர இதைத் தாண்டி வரலாற்று படமான பொன்னியின் செல்வன், ஹரி உடன் இணைந்து மற்றொரு படம், தன் மகன் துருவ் விக்ரம் உடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படங்கள் 2021ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

cobra-vikram
எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லாபம். 2017 ஆம் ஆண்டு சிங்கம் படத்தின் மூன்றாவது பாகத்திற்கு பிறகு தமிழில் ஸ்ருதிஹாசன் நடித்துள்ள ஒரே திரைப்படம் லாபம் படம்தான்.

laabam-netflix
அதுமட்டுமில்லாமல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் என்னும் படத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக விஜய் சேதுபதி மற்றும் மேகா ஆகாஷ் நடிப்பில் அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். இந்த திரைப்படம் உட்பட மூன்று திரைப்படங்களும் 2021 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

vijay sethupathi
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இந்தப் படமும் 2021 ஆம் ஆண்டு ரசிகர்கள் எதிர்பார்த்த படங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது.

karnan-cinemapettai
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த இரண்டு திரைப்படங்களும்மே 2021ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

jagame-thandhiram
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஹீரோ. அதன்பிறகு நெல்சன் உடன் கைகோர்த்து டாக்டர் எனும் படத்தில் நடித்துள்ளார்.

doctor
அதுமட்டுமில்லாமல் நேற்று இன்று நாளை படத்தை இயக்கிய ஆர் ரவிக்குமாரின் அடுத்த படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு அயலான் என பெயர் வைத்துள்ளனர். இந்த இரண்டு திரைப்படங்களும் 2021-ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

siva-ayalaan
சிம்பு நடிப்பில் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் ஈஸ்வரன். இந்த படத்தை சிம்பு ரசிகர்கள் முழுவதுமாக நம்பி உள்ளனர்.

eswaran-simbu-cinemapettai
அதுமட்டுமில்லாமல் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு மாநாடு எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களும் 2021 ஆம் ஆண்டு வெளியாக உள்ளது.

maanaadu-first-look-cinemapettai
கார்த்தி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் கைதி. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதன்பிறகு இவர் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் சுல்தான்.

sultan-cinemapettai
இந்த படமும் 2021 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழ் சினிமாவில் 2021ஆம் ஆண்டு பல படங்கள் வெளிவர உள்ளன. ஆனால் எந்த படம் இந்த வருடத்தில் சிறந்த படமாக தேர்வு ஆகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
