பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பிய வசூல்.. தமிழ் படங்களை மிஞ்சும் பிரேமலு கலெக்ஷன்

Premalu Movie : மலையாளத்தில் மஞ்சுமல் பாய்ஸ் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி ஒன்பதாம் தேதி வெளியான படம் தான் பிரேமலு. கிருஷ் ஏடி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு மலையாள சினிமாவை தாண்டி அனைத்து மொழி ரசிகர்களிடமும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

நஸ்லென், மமிதா பைஜு, சங்கீதா பிரதாப் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 36 நாட்கள் கடந்த நிலையில் 106 கோடியை தாண்டி வசூல் செய்திருக்கிறது. சாதாரணமான நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம் தான்.

ஆனாலும் தனது திரைக்கதை மூலம் இயக்குனர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் வரவேற்பு காரணமாக மற்ற மொழிகளிலும் பிரேமலு படம் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிரேமலு படத்தின் முதல் நாள் கலெக்ஷன்

அந்த வகையில் நேற்றைய தினம் மார்ச் 15 ஆம் தேதி தமிழ் மொழியில் பிரேமலு படம் வெளியாகி இருந்தது. இதில் மமிதா பைஜு தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார். அதேபோல் காமெடி காட்சிகளும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

ஆனால் தமிழ் டப்பிங்கில் சில இடங்களில் மட்டும் சொதப்பல் இருந்தது. இந்நிலையில் இந்த படம் எல்லோரும் பார்க்கக் கூடிய படம் என்பதால் குடும்ப ஆடியன்ஸ் அதிகமாக திரையரங்குகளில் வர தொடங்கினர்.

இதன் காரணமாக நேற்றைய தினம் தமிழில் மட்டும் 500க்கும் மேற்பட்ட ஷோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் தமிழ்நாட்டில் முதல் நாளில் பிரேமலு 48 லட்சம் கலெக்ஷன் செய்துள்ளது. தமிழில் வெளியாகும் படங்கள் கூட சமீபகாலமாக இவ்வளவு கலெக்ஷன் செய்யுமா என்பது சந்தேகம்தான்.

ஆனால் மலையாள மொழியில் உருவாக்கப்பட்ட பிரேமலு படம் தமிழ் மொழியில் வெளியாகி முதல் நாளே பெரிய அளவில் வசூலை பெற்றிருக்கிறது. மேலும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வசூல் இரட்டிப்பு ஆகவும் வாய்ப்பு இருக்கிறது. அதோடு தமிழில் பெரிய நடிகர்கள் படங்களின் இப்போது வெளியாகாமல் இருப்பது பிரேமலு படத்திற்கு இன்னும் பிளஸ் பாயிண்ட்டாக அமைந்திருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்