சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

தமிழ் சினிமாவை கெடுத்த எம்ஜிஆர்.. ஆரோக்கியம் இல்லாமல் இன்று வரை கஷ்டப்படும் சந்ததி

தமிழ் சினிமா இன்று வரை நடிகர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அந்த அளவுக்கு அவர்களின் அதிகாரம் தான் இங்கு மேலோங்கி இருக்கிறது. கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் கூட நடிகர்கள் சொல்வதை தான் கேட்கின்றனர்.

இந்த அளவுக்கு தமிழ் சினிமா முற்றிலும் மாறுவதற்கு முக்கிய காரணம் எம்ஜிஆர் தான். எப்படி என்றால் அந்த காலகட்டத்தில் எம்ஜிஆர் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார் என்றால் அந்த படத்திற்கு யாரை ஹீரோயினாக போட வேண்டும், யார் அந்த படத்தை தயாரிக்க வேண்டும், இயக்குனர் யார் என்பது போன்ற அனைத்தையும் அவர்தான் முடிவு செய்வாராம்.

அவர் சொல்வதைக் கேட்டு தான் அனைத்தும் முடிவு செய்யப்படுமாம். இப்படி எல்லா விஷயத்திலும் அவருடைய அனுமதியை பெற்று தான் ஒரு படத்தையே எடுத்து முடிப்பார்களாம். எம்ஜிஆர் ஆரம்பித்து வைத்த இந்த பழக்கம் இப்போது வரை பின்பற்றப்பட்டு வருகிறது.

அந்த நடிகர் கூறுவதை தயாரிப்பாளர் கேட்கிறாரே என்று ஒவ்வொரு நடிகரும் அதையே செய்ய ஆரம்பித்து விட்டனர். இதனால் தான் இப்போது தமிழ் சினிமா முற்றிலும் நடிகர்களின் கையில் மாறி இருக்கிறது. தற்போது முன்னணியில் இருக்கும் டாப் ஹீரோக்கள் கூறுவதை தான் தயாரிப்பாளர்கள் கேட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஒரு படம் எந்த தேதியில் வெளியிட வேண்டும் என்பதை கூட ஒரு நடிகர் தான் முடிவு செய்கிறார். மேலும் இன்றைய தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கூட ஹீரோக்களின் விருப்பத்திற்கு ஏற்ப கதையை மாற்றி விடுகின்றனர்.

இது முற்றிலும் ஆரோக்கியம் இல்லாத விஷயம். இந்த நடைமுறை தொடர்ந்து கொண்டே இருந்தால் அது தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எதிர்கால தமிழ் சினிமாவும் இதனால் பாதிக்கப்படும் என்ற கருத்து தற்போது முன் வைக்கப்படுகிறது. ஹீரோக்கள் மனது வைத்தால் இந்த நிலை முற்றிலும் மாறிவிடும். ஆனால் அது நடக்குமா என்பது சந்தேகம் தான்.

- Advertisement -

Trending News