ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

தனி ரூட்டை போட்டு வாய்ப்பை தட்டிப்பறிக்கும் நடிகை.. அதிர்ச்சியில் டாப் ஹீரோயின்கள்

பிரபல நடிகை ஒருவருக்கு தற்போது கோலிவுட் முதல் பாலிவுட் வரை வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். இதனால் இப்போது முன்னணியில் இருக்கும் டாப் ஹீரோயின்கள் அனைவரும் அந்த நடிகையின் மீது செம கடுப்பில் இருக்கிறார்களாம்.

நடிகைக்கு இப்படி பட வாய்ப்புகள் குவிவதற்கு காரணமே அவர் போடும் மாஸ்டர் பிளான் தானாம். அதாவது ஒரு திரைப்படத்தில் நடித்துவிட்டு சம்பளத்தை வாங்குவதில் மட்டுமே ஆர்வம் காட்டும் சில நடிகைகள் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது கிடையாது.

ஆனால் இந்த நடிகையோ ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் படு கிளாமராக வந்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். அது மட்டுமல்லாமல் சம்பள விஷயத்தில் எந்த கெடுபிடியும் காட்டாத இவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருகிறார்களாம்.

தற்போது மாஸ் நடிகருடன் ஜோடி போட்டு நடிக்கும் நடிகை படப்பிடிப்பு தளத்தில் ரொம்பவும் கலகலப்பாக இருக்கிறாராம். மேலும் இவர் ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகும் கூட அந்த ஹீரோவின் அடுத்த திரைப்படம் வெளிவந்தால் உடனே பாராட்டி விடுவாராம்.

இதுதான் பல ஹீரோக்கள் இவரை தங்கள் படங்களில் ஹீரோயினாக்குவதற்கு காரணம் என்று கிசுகிசுக்கப்படுகிறது. இவர் நடித்த படத்தில் ஒரு பாடலுக்கு ஆடிய அந்த டாப் ஹீரோயினுக்கு கூட இப்போது வாய்ப்புகள் கம்மியாக தான் இருக்கிறதாம்.

ஆனால் இந்த நடிகையோ சாமர்த்தியமாக காய் நகர்த்தி பல பட வாய்ப்புகளை தட்டிப் பறித்து வருகிறாராம். இதுதான் முன்னணி ஹீரோயின்களை இவர் மீது பொறாமை பட வைத்துள்ளது. ஆனால் அதையெல்லாம் பற்றி யோசிக்காத நடிகை காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பது போல் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் அள்ளிக் கொண்டு வருகிறாராம்.

- Advertisement -

Trending News