விஷாலை தொடர்ந்து இயக்குனர் அவதாரம் எடுக்கும் 3 முன்னணி நடிகர்கள்.. நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு ஏன் இப்படி!

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை இயக்குனர்கள் நடிகராகவும், நடிகர்கள் இயக்குனராகவும், இசையமைப்பாளர்கள் நடிகராகவும் களமிறங்குவது ஒன்றும் புதிதல்ல. அவ்வாறு வெற்றிகரமான நாயகனாக நடித்து கொண்டிருக்கும்போதே சில நடிகர்கள் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கின்றனர், அவர்களைப் பற்றி பார்க்கலாம்.

முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் மாதவன், இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை தானே நடித்து, தானே இயக்கியும் படமாக்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மிஸ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படத்தின் வெற்றிக்கு பிறகு, அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டனர். ஆனால், படப்பிடிப்பு தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே மிஷ்கினுக்கும், விஷாலுக்கும் ஏற்பட்ட மோதலால் மிஸ்கின் அப்படத்தை விட்டு வெளியேறினார். எனவே துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்கி இப்படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக களமிறங்குகிறார் விஷால்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்துள்ள அரவிந்த்சாமி தற்போது வில்லன் குணசித்ர வேடம் என கோலிவுட்டில் பிசியான ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இந்த வாரம் நெட்பிலிக்சில் ரிலீசாக இருக்கும் “நவரசா” தொடரில் ஒரு பகுதியை இயக்கி இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.

இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மையுடன் விளங்கும் விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன்-2 படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

vijay-antony-cinemapettai
vijay-antony-cinemapettai

இதுவரை நடிகர்களாக இவர்களின் படங்களை பார்த்து ரசித்த நாம் இனிமேல் இயக்குனர்களாக இவர்களின் படங்களை பார்க்க உள்ளோம். இயக்குனர்களாக அவதாரம் எடுத்துள்ள இந்த நடிகர்களின் படங்கள் எப்படி உள்ளன என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -