2020ஆம் ஆண்டு விஜய்யில் தொடங்கி ரஜினியிடம் முடிந்த சர்ச்சைகள்.. இந்திய அளவில் திரும்பிப்பார்க்க வைத்த 12 சம்பவங்கள்

கடந்த 2020ஆம் ஆண்டு திரை பிரபலங்கள் படங்களை தாண்டி சொந்த வாழ்க்கையிலும் பல சர்ச்சைகளை சந்தித்துள்ளன.

ரஜினியின் பெரியார் சர்ச்சை – துக்ளக் பத்திரிகையின் 50வது ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் பெரியாரைப் பற்றிய சில கருத்துக்களை முன் வைத்தார். இதனால் பெரும் சர்ச்சையை சந்தித்தார் ரஜினிகாந்த். மேலும் ஒரு சிலர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர். ஆனால் ரஜினிகாந்த் நான் நடந்ததை தான் சொன்னேன் புதிதாக எதுவும் சொல்லவில்லை எனக் கூறி மன்னிப்புக் கேட்பதை மறுத்துவிட்டார்.

rajinikanth-cinemapettai
rajinikanth-cinemapettai

விஜய் வீட்டில் ரெய்டு – மாஸ்டர் படபிடிப்பு நெய்வேலியில் நடந்த போது விஜய்க்கு வருமானவரித் துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என கூறி படப்பிடிப்பிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்தனார். இந்த விசாரணை முடிந்தவுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய்யை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

அப்போது நடிகர் விஜய் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவு செய்தார். கடந்த ஆண்டு விஜய் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படம் தான் 2020-ல் ட்விட்டரில் ரீ-ட்விட்  செய்யப்பட்ட புகைப்படத்தில் முதல் இடத்தை பிடித்தது.

vijay-most-retweeted-selfie-in-twitter
vijay-most-retweeted-selfie-in-twitter

கமல் இந்தியன் 2 விபத்து – சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார். அதற்காக சென்னையில் உள்ள பூந்தமல்லியில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு செட் அமைக்கப்பட்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கிரைன் கீழே விழுந்தது அதில் 3 பேர் பலியாகினர்.

இந்த சம்பவம் திரையுலகினர் பலரையும் கவலைக்கு உள்ளாக்கியது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதுமட்டுமில்லாமல் நடிகர் கமல்ஹாசன் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்திற்கு படத்தின் தயாரிப்பாளர்கள்தான் பொறுப்பு என கூறினார். மேலும் பலியானவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி படக்குழுவின் சார்பாக வழங்கப்பட்டது.

indian

திரௌபதிக்கு எதிர்ப்பு – இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட், ஷீலா மற்றும் கருணாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் திரௌபதி. இப்படம் ஜாதி, கலப்புத் திருமணத்தில் நடக்கும் அவலத்தை எடுத்துக் கூறியது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்ப்பு அதிகரித்தது.

அதுமட்டுமில்லாமல் படத்தின் வசனம் வன்முறை தூண்டுவதாக சர்ச்சையை கிளப்பினர். பல எதிர்ப்புகளை தாண்டி இப்படம் வெளியானாலும் பாராட்டு மற்றும் வசூலை வாரி குவித்தது.

draupathi director g mohan

ஜோதிகாவின் சர்ச்சை பேச்சு – படப்பிடிப்பிற்காக தஞ்சாவூர் சென்ற ஜோதிகா விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை பார்வையிட்டதாக தெரிவித்தார். மேலும் கோயிலுக்கு செலவு செய்து பராமரிப்பது போல மருத்துவமனைக்கும் செலவு செய்து பராமரிக்க வேண்டும். கோவிலில் உண்டியலில் போடும் பணத்தை மருத்துவமனை கொடுக்கலாம் என கருத்தை ஒன்றை தெரிவித்தார்.

இதனால் ஜோதிகாவிற்கு எதிராக சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. இதற்கு சூர்யா டுவிட்டரில் ஜோதிகா சொன்ன கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களும் கூறியுள்ளனர் என கூறி அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

jyothika
jyothika

OTT ரிலிஸ் சர்ச்சை – ஜோதிகா நடிப்பில் உருவான பொன்மகள் வந்தாள் எனும் திரைப்படம் திரையரங்கில் வெளியிடப்படும் என தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பொன்மகள் வந்தாள் மற்றும் சூரரைப்போற்று திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியானது.

இதனால் கோபமடைந்த தியேட்டர் உரிமையாளர்கள் இனி சூர்யா குடும்பத்தின் படங்கள் எதுவுமே தியேட்டரில் வெளியிட மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.  இது தொடர்பாகவும் பல சர்ச்சைகளை சந்தித்தது சூர்யாவின் குடும்பம்.

ponmagal-vandhal-100days-poster
ponmagal-vandhal-100days-poster

வனிதா திருமணம் – விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் பல சர்ச்சைகளை சந்தித்தது. மேலும் நடிகை கஸ்தூரி மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் முதல் மனைவியை பீட்டர் பால் விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்தது தவறு என கண்டித்தனர்.

ஆனால் வனிதா எனக்கும் பீட்டர் பாலுக்கும் நெருங்கிய அன்பு உள்ளது. இது மரணம் பிரிக்கும் வரை எங்கள் அன்பை யாராலும் பிரிக்க முடியாது என தெரிவித்திருந்தார். ஆனால் தேனிலவுக்காக கோவா சென்ற போது பீட்டர் பால் அதிகமாக மது குடித்ததால் விவாகரத்து செய்வதாக வனிதா கூறினார்.

vanitha-peter-paul
vanitha-peter-paul

விஜய்சேதுபதியின் 800 – இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமான 800 படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதாக இருந்தது. இலங்கை தமிழர்களின் படுகொலைக்கு முத்தையா முரளிதரன் குடும்பம் ஆதரவாக குரல் கொடுத்ததால் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என பல சர்ச்சைகள் ஏற்பட்டது.

அது மட்டுமில்லாமல் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இப்படத்திலிருந்து விலக வேண்டும் எனவும் கூறியிருந்தனர். இவர்களின் கோரிக்கையை விஜய்சேதுபதி ஒத்துழைத்து இப்படத்திலிருந்து விலகுவதாகவும் தெரிவித்திருந்தார். இதுவும் கடந்தாண்டு சர்ச்சையில் சிக்கிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

800-poster-cinemapettai
800-poster-cinemapettai

சிம்பு சர்ச்சை – சிம்பு ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளார், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ஒரு சில சர்ச்சைகளை சந்தித்தது. அதாவது படத்தில் சிம்பு பாம்பை கையில் பிடித்தபடி வைத்திருப்பார். இதனால் சமூக ஆர்வலர்கள் படத்தில் பாம்பை கொடுமைப்படுத்தியதாக, வன உயிரியல் சட்டத்தை மீறியதாகவும் குற்றம் சாட்டினார். அதற்கு படத்தின் இயக்குனர் சுசீந்திரன் படத்தில் சிம்பு கையில் வைத்திருந்தது பிளாஸ்டிக் பாம்பு என்றும் இதை வைத்துதான் கிராபிக்ஸில் நிஜ பாம்பாக உருவாக்கியதாகவும் தெரிவித்திருந்தார்.

eswaran-simbu-cinemapettai
eswaran-simbu-cinemapettai

சித்ரா தற்கொலை – சின்னத்திரை நடிகை சித்ரா பிரபல ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு அவரது கணவர் தான் காரணம் என போலீசார் ஹேமந்த் என்பவரை கைது செய்தனர். அதுமட்டுமில்லாமல் சித்ராவின் குடும்பத்தினர் மற்றும் சித்ராவுடன் பணியாற்றிய அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

vj chitra
vj chitra

இளையராஜாவும் பிரசாந்த் ஸ்டுடியோவும் – பிரசாந்த் ஸ்டுடியோவின் அரங்கில் உள்ள 5 அறைகளை இசைக்காக இளையராஜா பயன்படுத்தி வந்தார்.

பிரசாந்த் ஸ்டுடியோ நிர்வாகிகளுடன் சில கருத்து வேறுபாடு காரணமாக தனது ஸ்டூடியோ அறையை பூட்டிவிட்டு 2018ஆம் ஆண்டு வெளியேறினார்.  நீதிமன்றத்தில் நான் பணியாற்றிய ஸ்டுடியோவில் ஒரே ஒரு நாள் மட்டும் தானம் செய்ய அனுமதிக்குமாறு தனது கோரிக்கையை முன்வைத்தார். அதற்கு நீதிமன்றம் ஒத்துழைத்தது.

ஸ்டூடியோவில் தியானம் செய்வதாக இருந்த இளையராஜா திடீரென வரவில்லை. அவர் வருவதற்கு முன்பு ஸ்டூடியோவிலிருந்து பூட்டு உடைக்கப்பட்டு அவர் வைத்திருந்த விருதுகள் மற்றும் இசைக்காக பயன்படுத்திய இசைக் கருவிகள் அனைத்தையும் மற்றொரு அறைக்கு பத்திரமாக மாற்றியுள்ளனர். இதனால் அவர் பிரசாந்த் ஸ்டுடியோவிற்கு வரவில்லை.

ilayaraja-cinemapettai
ilayaraja-cinemapettai

அரசியலுக்கு வரவில்லை என கூறிய ரஜினி – நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாகவும் வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாகவும் முதலில் தெரிவித்திருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு மாற்றத்தை உருவாக்கும் என நம்பி இருந்தனர். ஆனால் ரஜினிகாந்தின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தற்போது அரசியலிலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். இதனால் பல ரசிகர்களும் சோகத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

rajinikanth-cinemapettai
rajinikanth-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்