ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அனிருத்தை தூக்கி வைத்துக் கொண்டாடும் தமிழ் சினிமா.. ஓரம் கட்டப்பட்ட யுவன்

தமிழ் சினிமாவை ஒரு காலகட்டத்தில் ஆட்சி செய்தவர் யுவன் சங்கர் ராஜா. எல்லா உணர்ச்சிகளையும் தனது இசை மூலம் ரசிகர்களுக்கு கொடுத்து வந்தார். கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு முன்னால் யுவனை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

அதிலும் அஜித்தின் படங்களில் யுவனின் பின்னணி இசை வேற லெவல் காம்போவில் இருக்கும். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக இசைக் கச்சேரிகளை யுவன் நடத்தி வருகிறார். 7 ஜி ரெயின்போ காலனி, யாரடி நீ மோகினி, மௌனம் பேசியதே, பருத்திவீரன் ஆகிய படங்களில் இவரது காதல் பாடல்கள் பெரிய அளவில் வரவேற்கப்பட்டது.

ஆனால் சமீபகாலமாக தமிழ் சினிமா யுவன் சங்கர் ராஜாவை ஓரம்கட்டி அனிருத்தை தலையில் தூக்கி வைத்துள்ளனர். இளம் இசையமைப்பாளரான அனிருத் போடுகின்ற குத்து பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தற்போது வெளியாகும் பெரிய நடிகர்களின் படங்களில் அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.

அதிலும் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட்டான விக்ரம் படத்தில் இவர் இசையமைத்த பாடல்கள் தான் தற்போது இளைஞர்கள் முணுமுணுக்கும் பாடல்களாக உள்ளது. மேலும் அனிருத் ஒரு படத்திற்கு இசை அமைத்தால் அந்த படம் ஹிட் என்று சொல்கிறார்கள்.

அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் ஒரு பெயரை கிரியேட் செய்துள்ளார் அனிருத். அதுமட்டுமல்லாமல் நிற்கக் கூட நேரம் இல்லாத அளவிற்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அனிருத்தை நாடி வருகிறது. தற்போது தலைவர் ரஜினியின் ஜெயிலர் படத்தில் அனிருத் இசையமைக்கிறார்.

இப்படி அனிருத்தின் கொடி ஓங்கி பறந்தாலும் யுவன் ஒன்றும் சாதாரண ஆளில்லை. கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் மீண்டும் திறமையை நிரூபித்துள்ளார். யுவனின் பாடல்களுக்காகவே விருமன் படத்தை பார்க்க மக்கள் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதுகிறது. இந்த வெற்றி மூலம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க உள்ளார் யுவன்.

- Advertisement -

Trending News