மார்க்கெட்டை பிடிக்க மற்ற நடிகைகளை கடுப்பேற்றிய இளம் நடிகை..

அந்த இளம் நடிகை தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதன் பின்னர் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமாகி அங்க முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதுதவிர ஒரு சில தமிழ் படங்களிலும் அந்த நடிகை நடித்துள்ளார். ரஜினி, கமல் உள்ளிட்ட மூத்த நடிகர்களுடனும் அந்த இளம் நடிகை நடித்துள்ளார்.

இதுதவிர நடிகை மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். ஓரளவிற்கு தென்னிந்திய சினிமாவில் நடிகைக்கு மார்க்கெட் நிலவி வருகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் சம்பள விஷயத்தில் நான் தயாரிப்பாளர்களுக்கு எப்போதுமே பாரமாக இருந்ததில்லை என சமீபத்தில் பேட்டி ஒன்றில் அந்த நடிகை கூறியுள்ளார்.

இளம் நடிகையின் இந்த பதிவை கேட்ட மற்ற நடிகைகள் அவர் மீது கொல வெறியில் உள்ளார்களாம். அப்போ நாங்கலாம் தயாரிப்பாளர்களை டார்ச்சர் செய்து வருகிறோமா என பொங்கி எழுந்து வருகிறார்கள் மற்ற நடிகைகள். இளம் நடிகையின் இந்த ஓபன் டாக்கால் மற்ற நடிகைகளுக்கு எங்க பிரச்சனை வந்து விடுமோ என பயந்து வருகிறார்கள்.

இருப்பினும் நடிகை திடீரென இப்படி பேச என்ன காரணம் என விசாரித்தால் மற்ற நடிகைகள் பலரும் அதிக சம்பளம் கேட்பதாக சமீபகாலமாகவே செய்திகள் வந்ததால், புதிய பட வாய்ப்புகளை கைப்பற்ற திட்டமிட்டே நடிகை இவ்வாறு கூறியுள்ளாராம். இதனால் நடிகை மீது மற்ற நடிகைகள் கோபமாக இருக்கிறார்களாம்.

சினிமாவில் நடிகர்களுக்குள் போட்டி பொறாமை இருப்பது சாதாரண ஒன்று தான். ஆனால் நடிகைகள் தங்கள் மார்க்கெட்டை தக்கவைக்க இப்படி எல்லாம் திட்டம் போடுகிறார்கள் என்பது தான் ஆச்சரியமாக உள்ளது. ஒரு வேளை ரூம் போட்டு யோசிப்பாங்க போல. எது எப்படியோ அவங்க ப்ளான் வொர்க் அவுட் ஆகுதா இல்லையானு பொறுத்திருந்து பார்க்கலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்