மொக்க கதையில நடிக்க மாட்டேன்.. பாகுபலி நடிகருடன் நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம், திறமையான நடிப்பு என்று தன் திறமையால் உயர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரையில் ஆரம்பித்து தற்போது பெரிய துறையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

அட்ட கத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய ஐஸ்வர்யா அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

நன்றாக நடிக்கத் தெரிந்த நடிகை என்று பெயர் வாங்கிய ஐஸ்வர்யா சமீபகாலமாக சற்று திமிராக நடந்து கொள்வதாக பேச்சு அடிபட்டு வருகிறது. அதாவது தெலுங்கு நடிகரும், நடிகை த்ரிஷாவின் முன்னாள் காதலரான நடிகர் ராணாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு ஐஸ்வர்யாவுக்கு சென்றுள்ளது.

ஆனால் அவர் படத்தின் கதை பிடிக்கவில்லை என்ற காரணத்தைக் கூறி நடிக்க மறுத்துள்ளார். மேலும் நடிக்காமல் கூட இருப்பேன் ஆனால் இந்த மாதிரி மொக்கை கதைகளில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். அவரின் இந்த திமிரான பேச்சு தான் தற்போது திரை உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பல தொடர் வெற்றிப் படங்கள் மற்றும் விருதுகளால் ஐஸ்வர்யாவுக்கு சற்று ஆணவம் அதிகமாக உள்ளது என பலரும் வெளிப்படையாக கிசுகிசுக்கின்றனர். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஓவர் திமிரு காட்டிய நடிகைகள் பலரும் திரையுலகில் ஜொலிக்க முடியாமல் காணாமல் போயுள்ளனர். ஐஸ்வர்யா சற்று அதை நினைவில் வைத்து நடந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்