வேறு வழியில்லாமல் கவர்ச்சிக்கு ஓகே சொன்ன மூன்றெழுத்து நடிகை

நம்ம தமிழ் சினிமால தமிழ் ஹீரோயின்கள விட இதர மொழி ஹீரோயின்களின் ஆதிக்கம் தான் அதிகமா இருக்கு. அவ்வளவு ஏன் தமிழ்ல லேடி சூப்பர் ஸ்டாரா வலம் வர்ற நயன்தாரா கூட மலையாள நடிகை தான். ஐஸ்வர்யா ராஜேஷ் மாதிரி ஒரு சில தமிழ் நடிகைகள் தான் தமிழ் சினிமால இருக்காங்க.

மத்தபடி புதுசா வர்ற நடிகைகள் கூட இதர மொழில இருந்து தான் வர்றாங்க. அந்த மாதிரி அக்கட தேசத்துல இருந்து நம்ம தமிழ் சினிமாவுக்கு வந்தவங்க தான் அந்த மூன்றெழுத்து நடிகை. இவர் தமிழ்ல அறிமுகமான முதல் படமே பட்டி தொட்டி எங்கும் பயங்கர வெற்றி பெற்றது. அதுமட்டும் இல்லாம இவங்களோட முதல் படத்துக்கு தேசிய அளவுலயும் அங்கீகாரம் கிடைச்சது.

இந்த படத்துல அம்மணி மிகவும் ஹோம்லியா நடிச்சிருந்தாங்க. நம்ம நடிச்ச முதல் படமே இவ்வளவு ஹிட்டாகிடுச்சு அப்போ கண்டிப்பா நமக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும்னு அந்த நடிகை கனவு உலகத்துல மிதக்க ஆரம்பிச்சாங்க. ஆனா அவங்க கனவு பலிக்கவே இல்லை. அவங்க எதிர்பார்த்த மாதிரி அவங்களுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கல.

இருந்தும் அந்த நடிகை ஹோம்லியா தான் நடிப்பேன்னு பிடிவாதமா இருந்தாங்க. ஆனா அந்த நடிகைக்கு பட வாய்ப்பு கிடைக்கவே இல்லை. இதனால பொறுமை இழந்த நடிகை மற்ற நடிகைகள போலவே கவர்ச்சிய கையில எடுத்துட்டாங்களாம்.

ஹோம்லியா நடிச்சா வேலைக்காகாதுனு புரிஞ்சுக்கிட்ட அந்த நடிகை கவர்ச்சியில் இறங்கி விட்டார். எனவே தொடர்ந்து படு கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறாராம்.

மார்க்கெட்டை இழந்த எல்லா நடிகைகளும் கடைசியா கையில எடுக்குற ஆயுதம் தான் கவர்ச்சி. அந்த வகையில நடிகையின் இந்த முயற்சி இவருக்கு கைகொடுக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்